மத்திய பா.ஜ.க அரசு செயல்முறைப்படுத்த
துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை பற்றி நான் அனைவரும்
அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்… இது முதலில்
புதிய கல்விக்கொள்கையே அல்ல… பழைய குலக்கல்வித் திட்டத்தைத்தான் தூசு தட்டி
புதியது என்ற பெயரில் நம்மீது திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஆரம்பத்திலேயே எதிர்க்கவில்லை என்றால்,
நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும்
ஆபத்து இருக்கிறது… அப்படி என்ன அதில் இருக்கிறது என்று கேட்போருக்கு
நம்முடைய தெளிவான விளக்கங்கள்.!
1. முதலில், இக்கல்வித்திட்டம் இந்தி,
சமற்கிருதத்தை முன்னிறுத்தும் நோக்கில் வரையப்பட்டுள்ளது… இதன் வரைவுக்
கொள்கை முகவுரையில், வேதக்கல்வி அடிப்படையில் அமைந்துள்ளது என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குரு – மாணவன் உன்னத உறவை வலியுறுத்துகிறது.
வேத காலத்தில் சூத்திரர்கள் கல்வி
கற்கக்கூடாது.. மீறிக் கற்றால் நாக்கை அறுக்க வேண்டும். வேதத்தைக் காதால்
கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை
அமல் செய்யப் போகிறதா மத்திய அரசு..? அதுமட்டுமல்லாமல் சமற்கிருத மொழியில்
என்ன அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவா… அத்தனையும்
மதம்சார்ந்த, வர்ணாசிரமம் சார்ந்த விடயங்கள் தானே சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த அறிவியல் யுகத்தில் இவைகள் எந்த வகையில் பயன்படப் போகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment