நம் வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு
நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாகாவோ, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் தான்
நிகழக்கூடியது. இருந்தபோதிலும் மனித மனம் எப்பொழுதும் நேர்மறையாகவே
நினைத்துக் கொண்டிருப்பதுவே கிடையாது. எப்பொழுதும் “நெகட்டிவ்” என்று
சொல்லப்படும் எதிர்மறை எண்ணங்களைத் தான் அதிகமாக மனம் நினைத்துக் கொண்டும்
சிந்தித்துக் கொண்டும் இருக்கிறது. இப்படி நம் மனம் எதை எதிர்பார்க்கிறதோ
அதையே தான் வாசலில் ஆரத்தி கரைத்து எதிர்பார்த்துக் கொண்டுமிருக்கும்.
இப்படித்தான் குப்பைகளான எண்ணங்கள் நம்முள் நுழையும், பிறகு அவை
எண்ணங்களின் குப்பைகளாக உருவெடுக்கும். சிலர் இதற்கு விதி விலக்காக
இருப்பார்கள், அவர்களுக்கு இயற்கையாகவே நேர்மறையும் நம்பிக்கை எண்ணமும்
மேலோங்கி இருக்கும். அப்படி இல்லாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை
ஏனென்றால் நீங்களும் அவ்வாறு மாறமுடியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment