பாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும்,
நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின்
சிறிய கவிதை முதல் காப்பியம் வரை இப்பொதுவியல்பு காணப்படும். அவரின் ஒரு
நெடுங்கவிதை திருவாரூர் தேர் என்பதாகும். இது அருள்சுடர் பதிப்பகம்
வெளியிட்ட பாரதிதாசன் கவிதைகள் என்ற தலைப்புடைய முழுத் தொகுப்பில்,
குயில் பாடல்கள் என்ற பகுதியில் உள்ளது. இக்கவிதையில் நகையுணர்வும்,
புரட்சிக் கருத்துகளும் அமைந்து சிறக்கின்றன. எல்லா இடத்திலும் இறைவன்
இருக்கிறான் என்றால் எதற்காக ஓரிடத்தில் எல்லா மக்களும் சென்று நெருக்கடியை
உண்டு செய்யவேண்டும் என்ற அடிப்படைக் கேள்வியை முன்வைக்கும் நிலையில்
இக்கவிதை வரையப்பெற்றுள்ளது.
திருவாரூரில் அருள்மிகு தியாகராசர்
மூலக்கடவுளாக விளங்குகிறார். அவருக்குத் தேர்த் திருவிழா நடைபெறும்.
அத்தேர்த்திருவிழாவில் மக்கள் அதிக அளவில் கூடுவர். இத்தேர் ஆழித்தேர்
என்று அழைக்கப்பெறும் அளவில் மிகப் பெரிதானது. எண்கோணத்தில் இருபது
பட்டைகள் உடையதாய் முன்னூற்று ஐம்பது டன் எடை கொண்டதாக இத்தேர்
விளங்குகிறது. பாரதிதாசன் காலத்தில் இத்தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது.
அத்தேர்த் திருவிழாவைக் காண அக்காலத்தில் புகைவண்டியில்தான் செல்லவேண்டும்.
இதற்காக மக்கள் புகைவண்டியில் பதிவுசெய்ய முண்டியடித்தனர். தேருக்கு முதல்
நாள் புகைவண்டியில் ஏறுவதற்கு இயலாத நிலை. மக்கள் கூட்டம் கூட்டமாக
திருவாரூர் தேர் காண வந்த காட்சியை, அவர்கள் அக்கூட்ட நெரிசலில்
சிக்கித்தவிப்பதை பாடமாக படிப்பவர்முன் சித்தரித்துக் காட்டுகிறார்
பாரதிதாசன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment