ஒரு குழந்தையை பத்து மாதம் கருவில்
சுமந்து, பெற்று, கண்ணும் கருத்தும் கொண்டு வளர்க்கும் தாய்தான் ஒரு
குழந்தையின் இயற்கை பாதுகாவலர் (natural guardian) என்பது தான் சரியாக
இருக்க முடியும். ஆனால் இந்தியா போன்ற குடும்ப அமைப்பும், ஆண் ஆதிக்கமும்
கொண்ட நாட்டில் அத்தகைய பரந்த நோக்கு மக்களுக்குக் கிடையாது. குறிப்பாக ஒரு
பெண் திருமணம் ஆகாமல் தாய் ஆகும் நிலையில், அவளுக்கு விருப்பம் இல்லை
என்றாலும் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்பதை வெளியிட்டே தீர வேண்டும்,
அந்த நபர் தான் குழந்தையின் முதன்மை பாதுகாவலர் என்ற நிலையே இருந்து
வந்தது. இந்த நிலையினை மாற்ற, இந்திய உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு மிகச்
சிறந்த தீர்ப்பினை வழங்கியது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment