Wednesday 28 June 2017

பெண்


Siragu-mannichchidunga-article-fi.jpg

நண்பர் ஒருவருடன் தகவல் பரிமாறிக்கொள்கையில் ஆண் பெரியதா, பெண் பெரியதா என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது. அதாவது திருவிளையாடல் படத்தில் வருவது போலவே சிவன் பெரியதா, சக்தி பெரியதா என்பது போல! பொதுவாகச் சென்று விடுவோம் என்றவாறாக, இருவரும் சமுதாயத்தின் இரு கண்கள் என்றேன். அவன் எனக்கும் சேர்த்தே ஆண் தான் பெரியது என்றான். சரி எதிரணிக்குச் செல்வோம் என்று கங்கணம் கட்டாமல் பெண் தான் பெரிதென்று கூறினேன், ஏனென்றால் வேறு வழியும் இல்லை.



ஆணிடம் இருப்பது சில பெண்ணிடம் இல்லை, பெண்ணிடம் இருப்பது சில ஆணிடம் இல்லை! உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி. அதே போல ஆண், பெண் இவர்களை ஒப்பிடுவதற்கு இவர்கள் என்ன பண்டமா? பொருளா ?. இரண்டுமே தனித்துவம், இரண்டுமே உயிர்! அதற்குரிய சிறப்பு அதனிடம் மட்டுமே உண்டு. சமுதாயத்தில் இரு கண்களில் ஆணும் பெண்ணும் இல்லையென்றால் நானும் நீங்களும் இருந்திருக்கப்போவதில்லை! அட யாரும் இருந்திருக்கமாட்டோம்தான். இருந்தாலும் அவன் தன் நிலைப்பாட்டை எள்ளளவும் மாற்றிக்கொள்ளவில்லை! மன்னிக்கவும் எள்ளின் முனையளவு கூட மாற்றிக்கொள்ளவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 June 2017

தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும்


Siragu U._V._Swaminatha_Iyer 3

‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் ‘உத்தமதானபுரம் வே. சாமிநாத ஐயர்’ (1855-1942) அவர்களுக்கு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பட்டம். இவர் பெற்ற அனைத்துப் பட்டங்களுடன் இவரது முழுப்பெயரும் “பிரம்மஸ்ரீ மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் மகாவித்வான் டாக்டர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையரவர்கள்” என்று குறிப்பிடப்படுவதையும் நூல்களில் காணலாம்.


அறுபதாண்டுக் காலத்துக்கும் மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றிய தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். உ.வே.சா. என்ற பெயர் தமிழ் பதிப்புலக வரலாற்றில் சிறப்பிடம் பிடித்த பெயர். பழந்தமிழ் நூல் பதிப்பித்தலில் இவர் காட்டிய சிறப்பு அக்கறையாலேதான் சங்கத்தமிழ் நூல்கள் பலரையும் சென்றடைந்தன. இந்த நூல்களின் வாயில்களாகவே இன்று நாம் பழங்காலத்தில் தமிழரின் வாழ்வையும் வளங்களையும் அறிந்து கொள்கிறோம். சங்கத் தமிழர்களை தற்காலத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் உ.வே.சா. எனலாம். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை அச்சுப்பதிப்பில் தமிழர் கையில் தவழ விட்டவர் என்றால் அது மிகையன்று. இவர் தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழின் செம்மொழித் தரத்திற்கு உ.வே.சா.பதிப்பித்த சங்கத்தமிழ் நூல்களே தக்க சான்றுகள் வழங்கின.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 26 June 2017

மக்களாட்சித் தத்துவம் மறக்கடிக்கப்படுகிறதா…!


Siragu hindhi1

மக்களாட்சித் தத்துவம் என்பது, மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை தங்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுப்பது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் ஒரு கட்சி தங்கள் வாக்குறுதிகளை மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கிறது. அதனை நம்பித்தான் மக்களும் தங்கள் ஆதரவை அவர்களுக்கு நல்குகிறார்கள். இது தான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், வாக்குறுதிகளுக்கும், தங்கள் ஆட்சிக்கும் தொடர்பே இல்லாதது போல, ஆட்சிக்கு வந்ததும் நடந்து கொள்ளும் ஒரு முறை இருக்கிறதே, இது தான் சர்வாதிகார ஆட்சி முறைக்கு வித்திடுகிறதோ என்று நம்மை அச்சப்பட வைக்கிறது.!

Siragu hindhi3



தற்போது இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ச.க அரசு அப்படித்தான் அநேக செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்தே மக்களுக்கு பல வழிகளில் இடையூறுகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. இந்தித்திணிப்பு, சமற்கிருதத்திணிப்பு என அரசு அலுவலங்கள், மத்திய கல்வித்துறை பள்ளிகள் மூலம் திணிப்பைக் கொண்டு வந்தது. தங்கள் ஆட்சி புரியும் ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பகவத்கீதையை கல்வியில் புகுத்தி இருக்கிறது. பகவத்கீதை ஒரு வருணாசிரம நூல். நால்வருணமுறையை வலியுறுத்தக் கூடிய சமூகநீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான ஒரு நூல். அதனை பள்ளி சிறார்கள் பாடத்திட்டத்தில் வைத்தல் என்பது பிஞ்சு மனங்களிடம் நஞ்சை விதைப்பது போலாகாதா…!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 21 June 2017

இந்தி எதிர்ப்பு! (கவிதை)


Siragu hindhi5

திரண்டெழுந்த தோள்களுண்டு அடுதோள்
                திறம்முடைத்த வீரர்படை யுண்டு
தாய்நாட்டுக் கொருதீமை வருமால்
                தன்னுயிரீந் தின்புறும்வீ ரருண்டு
வரும்பகைக்கட னழிக்காது எனதுடல்
                வீழாதென என்தாய்மீ தாணை!;
தாய்நாட்டிற் கெனதுயிர்வீ ழாதெனின்
                ஈன்றதாய்தன் மகவெண்ணி புகழ்வளோ?
நரிக்குணந்தரித் தலையும்கொடு விலங்கு

                நம்மீது பாய்வதோ? மொழியால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 20 June 2017

குறிஞ்சி நில மகளிரின் பொருளீட்டலும்,பொறுப்புணர்வும்


Siragu kurunji1



மானுடத் தோற்றத்திற்கு அடிப்படையாய் விளங்குவது பெண்மையே. பொறுமை, ஆற்றல் ஆகியவற்றின் உருவகமாகவும் சக்தியின் பிரதிபலிப்பாகவும் போற்றப்பட்டு வருவதும் பெண்மையே. இத்தகைய மகளிரின் பண்பு நலன்கள் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். “வினையே ஆடவர்க்கு உயிரென” வினைமேற்கொள்ளல் ஆடவரின் தலையாய கடமையாகக் கூறப்பட்டாலும், மகளிர் கணவனது வாழ்க்கைக்குத் துணையாய் நின்று அன்பினால் ஒன்றி வாழ்ந்து, இல்லத்தில் கணவரையும் குழந்தைகளையும் பேணிக்காத்து, வரவுக்குத் தக்கபடி குடும்பம் நடத்தி, விருந்தினரைப் போற்றியும் வாழ்ந்ததால் “மனைக்கு விளக்கம் மடவார்” என சிறப்பிக்கப் பெற்றனர். தன் வாழ்க்கைக்கு தன் குடும்பத்திற்கு ஏற்றவகையில் கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் வகையில், அட்டில்தொழில், மாலை தொடுத்தல், ஒவியம் வரைதல் போன்றவற்றையும் கற்று அதன் மூலம் பொருளீட்டலில் ஆர்வமும் பொறுப்புணர்வும் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 19 June 2017

கவிக்கோ அப்துல் ரகுமான் !!

Siragu Kaviko

கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றி கண்ணதாசன் இப்படிச் சொன்னார்: “நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும்போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்துவிட்டார்!’’
அந்த தமிழின் கலீல் ஜிப்ரானை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது.

அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறந்த தமிழ் ஆளுமை, மரபுக் கவிதைகளை மிகுந்த நெறியோடு எழுதக் கூடியவர். தமிழ்க் கவிதைகளில் ஹைக்கூ, கசல், கவ்வாலி போன்ற வடிவங்களை சிறப்பாக கையாண்டவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 14 June 2017

வெள்ளந்தி சிற்பங்கள்!(கவிதை)


Siragu childrens


“வெள்ளந்தி” மனது..
குழந்தையின் மென்மனம்..
யாரேனும் அப்பாவி
எங்கேனும் அகப்பட்டால்
சமூகத்தில் ஏனையோர்க்குப்
புதியதோர் குதூகலம்-
‘அடித்திடு மொட்டையை!’



‘எழிலான எம் சிகையை
இறைவனுக்கு வழங்கும் முன்பு
எங்களின் அனுமதியை
ஒப்புக்கும் கேட்டதில்லை!’

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/

Tuesday 13 June 2017

கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும்


Siraguu kanayaali1

திருமணச் சடங்கில் இந்திய மணமக்கள் பெரும்பாலும் மாலை மாற்றிக் கொள்வார்கள். பிறகு இந்திய வட்டாரங்களில் வாழும் பல்வேறு சமயங்களின், இனங்களின், குலங்களின் வழக்கப்படி தாலி கட்டுவது, மோதிரம் அணிவிப்பது, பதிவுத் திருமணங்களில் திருமணப் பதிவேட்டில் கையெழுத்திடுவது எனப் பற்பலவகைச் சடங்குகள் வழியாக மணமக்களின் திருமணம் சட்டப்படி அங்கீகாரம் செய்யப்படுகிறது.



மோதிரம் அல்லது கணையாழி அணிவிப்பது மாலை மாற்றுவதற்கு இணையான பண்டைய வழக்கங்களில் ஒன்று. பாரத நாட்டுக்கு அப்பெயர் வழங்கக் காரணம் எனக் கூறப்படும் கதைகளில் ஒன்று பரதன் என்னும் மன்னவன் பெயரால் பாரதம் அல்லது பரதவர்ஷம் எனப் பெயர் ஏற்பட்டது என்பது. இந்தப் பரதனின் தாய் தந்தையர் ஹஸ்தினாபுரத்தின் மன்னன் துஷ்யந்தனும், தாய் சகுந்தலையும் என்பது ஒரு தொன்மக் கதை (மற்றொன்று, சமண சமய ரிஷபதேவரின் மகனான பேரரசன் பரதன் என்பவனால் பாரதம் எனப் பெயர் பெற்றது என்ற கதை). அந்த துஷ்யந்தன்-சகுந்தலையின் கதையில் அவர்களது காந்தர்வ திருமணத்திற்கு அடையாளமாக மோதிரம் காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 12 June 2017

சுற்றுப்புறச்சூழல் காப்போம்


Siragu environment2

உலக சுற்றுப்புறச்சூழல் தினமாக ஜூன் 5 – ந்தேதி உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் சேர்ப்பதில் சமூக ஆர்வலர்கள் இவ்வாண்டு அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக மரம் வளர்ப்பது என்பது சில ஆண்டுகளாக நம்மிடம் குறைந்திருந்தது. அதிலும் நம் மண்சார்ந்த மரங்கள் நடுவது என்பது எல்லோருக்கும் ஒரு விருப்பமில்லா செய்கை என்ற மாயை உருவாகி இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால், நம் மரங்கள் வளர்வதற்கு தாமதமாகும், வளர்ந்து பயன் தர பலஆண்டுகள் ஆகிறது என்ற ஒரு மனநிலைதான் காரணம். வெளிநாட்டு மரங்கள் வெகு விரைவில் வளர்ந்து, பெரிய மரமாகி நிழல் தருகின்றன. அதனால் தான் நம் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, சாலை இரு மருங்கிலும் இந்த மண்சாரா மரங்களை வளர்த்து வைத்திருக்கின்றனர். சென்ற 2016 -ஆம் ஆண்டு சென்னையில் வந்த ‘வர்தா புயல்’ காரணமாக பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 7 June 2017

கவிக்கோ அண்ணல்(கவிதை)


Siragu Kaviko

கவிக்கோவே! அண்ணலே! –உன்
கவிதையால் இவ்வுலகை “ஆலாபனை” செய்தாய்
மரபைமீறாது இலக்கணம் துணைகொண்டு
புதுமரபின் வேர்பார்த் தாய்நீ!

புதுக்கவிதை வித்தகனே!
புதுமரபின் கவிக்கோவே! –உன்
எழுத்தால் புதுஉரம் ஊட்டி
எழுச்சியை செய்தாயே!




மேடை தோறும் மணக்கும் -உன்
செந்தமிழால் புதுக்விதை படித்து
எதிர் அமர்ந்த நெஞ்சை மீட்டாய்
கவிக்கோவே! அண்ணலே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/

Tuesday 6 June 2017

“திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம்!!”


Siragu panneerselvam1
சூன் 1 – திராவிடர்ச் செல்வர், தமிழர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்.
திருவாரூர் என்றால் தமிழர்களுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் கருணாநிதியிடம் கேட்டால், அவர் தாய், தந்தை மட்டுமல்லாமல் நண்பர்கள், தலைவர்கள் பெயரை பட்டியலிடுவார். அப்படி பட்டியலிட்டால் அதில் முதல் பெயராக இருப்பது ஏ.டி.பன்னீர்செல்வமாக இருக்கும்.


திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில் செல்வபுரத்தில் தாமரைச்செல்வன் – ரத்தினம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் பன்னீர்செல்வம். தந்தையின் உடல்நலக்குறைவால் படிப்பைத் தொடர முடியாமல் ரயில்வேயில் அலுவலக கிளர்க்காக பணியில் சேர்ந்தார். பின்னாளில் அந்த வேலையை விட்டு விவசாயம் செய்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 5 June 2017

இன்றைய உலக அறம்


இன்றைய உலக அறத்திற்கு மறுபெயர் ‘கார்ப்பரேட் அறம்’

Pointing at touchpad

“போட்ட முதலைப் பலமடங்காக எப்படித் திரும்ப எடுக்கவேண்டும்” என்பதே கார்ப்பரேட் அறத்தின் அடிப்படை. இது தெரியாதவனுக்கு இந்த உலகில் வாழத் தகுதியில்லை. குழந்தையின் கல்விக்காக நீங்கள் ஐம்பது லட்ச ரூபாய் செலவுசெய்தாலும் அதுவும் முதலீடே ஆகும்.
கார்ப்பரேட் அறம் என்பதில்:

(அ) கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அறம், (ஆ) கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளுக்கான அறம், (இ) அரசாங்கத்தின் அறம், (ஈ) தனிமனிதனின் அறம் என்ற நான்கும் அடங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 2 June 2017

“சா”ப்பறை (கவிதை)


Siragu parai1

“சா”ப்பறை
ஆதிநாதம் கனத்து ஓலிக்கிறது!
வீதியெங்கும்
ஊர்வலத்தில் அவன் கலைஞன்.
அந்தம் நாடிச் செல்லும் ஊர்வலம்
கொட்டுகிறான் ஆதிநாதத்தை “தம் தம் தம்தம்”

ஆதிக் குடியெனும் பெயரில்லை
சாதிக் குடியான் வைத்தான் ஒரு பெயரை



பாறையில் கண்ட தோலைத் தட்ட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday 1 June 2017

திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் நா. காமராசன்


Siragu na-kamarasan1

மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் திரைப்படங்களில் பாடல்கள் அத்தனையும் தவறாது வெற்றிபெறும். அதற்குக் காரணம், எம்.ஜி. ஆர். அவை உருவாவதில் தனிப்பட்ட விதத்தில் அதிகக் கவனம் செலுத்துபவர் என்பதும், அவர் திரைப்படப்பாடல்களின் கலை நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதும் திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கூறும் கருத்து. கலையுலகில் திறமையாளர்களை அடையாளம் கண்டு, தக்க வகையில் வாய்ப்பளித்து அவர்களை வளர்த்துவிடுவதும் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.


பாடுவது எம்.ஜி.ஆரே தான் என அடித்துச் சொல்லும் அளவிற்கு டி.எம்.எஸ்-சின் குரல் அவர் பாடல்களுக்குப் பொருந்தியது. இருப்பினும் அவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே. ஜே. ஏசுதாஸ் போன்ற பிற பாடகர்களைத் தனது பாடல்களைப் பாட நாடவேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அவர்களது மென்மையான குரல் எதிர்பார்த்த அளவுக்கு அவரது குரலுடன் பொருந்தி வராத போதிலும், திரையுலக நாயகிகள் எம். ஜி. ஆரைக் கண்டு உருகி கனவு காணும் பாடல்களுக்கு அவர்களுடன் பாடுவதற்கு புதியவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். “கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் கொள்கை வீரர் தியாகங்களை 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.