மானுடத் தோற்றத்திற்கு அடிப்படையாய்
விளங்குவது பெண்மையே. பொறுமை, ஆற்றல் ஆகியவற்றின் உருவகமாகவும் சக்தியின்
பிரதிபலிப்பாகவும் போற்றப்பட்டு வருவதும் பெண்மையே. இத்தகைய மகளிரின் பண்பு
நலன்கள் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் தமது கருத்துக்களை
எடுத்துரைத்துள்ளனர். “வினையே ஆடவர்க்கு உயிரென” வினைமேற்கொள்ளல் ஆடவரின்
தலையாய கடமையாகக் கூறப்பட்டாலும், மகளிர் கணவனது வாழ்க்கைக்குத் துணையாய்
நின்று அன்பினால் ஒன்றி வாழ்ந்து, இல்லத்தில் கணவரையும் குழந்தைகளையும்
பேணிக்காத்து, வரவுக்குத் தக்கபடி குடும்பம் நடத்தி, விருந்தினரைப்
போற்றியும் வாழ்ந்ததால் “மனைக்கு விளக்கம் மடவார்” என சிறப்பிக்கப்
பெற்றனர். தன் வாழ்க்கைக்கு தன் குடும்பத்திற்கு ஏற்றவகையில்
கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் வகையில், அட்டில்தொழில்,
மாலை தொடுத்தல், ஒவியம் வரைதல் போன்றவற்றையும் கற்று அதன் மூலம்
பொருளீட்டலில் ஆர்வமும் பொறுப்புணர்வும் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை சங்க
இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment