நண்பர் ஒருவருடன் தகவல்
பரிமாறிக்கொள்கையில் ஆண் பெரியதா, பெண் பெரியதா என்ற வாக்குவாதம்
நிகழ்ந்தது. அதாவது திருவிளையாடல் படத்தில் வருவது போலவே சிவன் பெரியதா,
சக்தி பெரியதா என்பது போல! பொதுவாகச் சென்று விடுவோம் என்றவாறாக, இருவரும்
சமுதாயத்தின் இரு கண்கள் என்றேன். அவன் எனக்கும் சேர்த்தே ஆண் தான் பெரியது
என்றான். சரி எதிரணிக்குச் செல்வோம் என்று கங்கணம் கட்டாமல் பெண் தான்
பெரிதென்று கூறினேன், ஏனென்றால் வேறு வழியும் இல்லை.
ஆணிடம் இருப்பது சில பெண்ணிடம் இல்லை,
பெண்ணிடம் இருப்பது சில ஆணிடம் இல்லை! உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி. அதே
போல ஆண், பெண் இவர்களை ஒப்பிடுவதற்கு இவர்கள் என்ன பண்டமா? பொருளா ?.
இரண்டுமே தனித்துவம், இரண்டுமே உயிர்! அதற்குரிய சிறப்பு அதனிடம் மட்டுமே
உண்டு. சமுதாயத்தில் இரு கண்களில் ஆணும் பெண்ணும் இல்லையென்றால் நானும்
நீங்களும் இருந்திருக்கப்போவதில்லை! அட யாரும் இருந்திருக்கமாட்டோம்தான்.
இருந்தாலும் அவன் தன் நிலைப்பாட்டை எள்ளளவும் மாற்றிக்கொள்ளவில்லை!
மன்னிக்கவும் எள்ளின் முனையளவு கூட மாற்றிக்கொள்ளவில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment