மக்களாட்சித் தத்துவம் என்பது, மக்கள்
விரும்பும் ஒரு நல்லாட்சியை தங்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுப்பது என்று
நாம் எல்லோருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் ஒரு கட்சி தங்கள்
வாக்குறுதிகளை மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கிறது. அதனை நம்பித்தான்
மக்களும் தங்கள் ஆதரவை அவர்களுக்கு நல்குகிறார்கள். இது தான் நடைமுறையில்
இருக்கிறது. ஆனால், வாக்குறுதிகளுக்கும், தங்கள் ஆட்சிக்கும் தொடர்பே
இல்லாதது போல, ஆட்சிக்கு வந்ததும் நடந்து கொள்ளும் ஒரு முறை இருக்கிறதே,
இது தான் சர்வாதிகார ஆட்சி முறைக்கு வித்திடுகிறதோ என்று நம்மை அச்சப்பட
வைக்கிறது.!
தற்போது இந்தியாவில் ஆட்சி புரியும்
பா.ச.க அரசு அப்படித்தான் அநேக செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்தே மக்களுக்கு பல வழிகளில் இடையூறுகளை செய்து
கொண்டுதான் இருக்கிறது. இந்தித்திணிப்பு, சமற்கிருதத்திணிப்பு என அரசு
அலுவலங்கள், மத்திய கல்வித்துறை பள்ளிகள் மூலம் திணிப்பைக் கொண்டு வந்தது.
தங்கள் ஆட்சி புரியும் ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பகவத்கீதையை
கல்வியில் புகுத்தி இருக்கிறது. பகவத்கீதை ஒரு வருணாசிரம நூல்.
நால்வருணமுறையை வலியுறுத்தக் கூடிய சமூகநீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான
ஒரு நூல். அதனை பள்ளி சிறார்கள் பாடத்திட்டத்தில் வைத்தல் என்பது பிஞ்சு
மனங்களிடம் நஞ்சை விதைப்பது போலாகாதா…!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment