Monday, 4 September 2017

வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!


Siragu kurundhogai maanaadu4

ஆகஸ்ட் 26‍-ஆம் நாள் சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது! எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை முறையாக மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து ஒரு பன்னாட்டு விழா நடைபெற்றது! காலை 9 மணிக்கு,  தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா. அடுத்து குத்து விளக்கு ஏற்றுதலை திருமதி கீதா பிரபாகரன்,  திருமதி ஜெயந்தி சங்கர், திருமதி கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் முன்னின்று நடத்தினர்.  தொடர்ந்து வாசிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் பலர் இணைந்து தாய் மொழியே வணக்கம் , யாமறிந்த மொழிகளிலே, மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட, விழா களை கட்டியது.


மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம். வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தின.  பேரவையின் துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி ஆற்றிய துவக்க உரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு என்ற வரிசையில் இந்த அமைப்புகள் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்தி,  விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகமும் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன். குறுந்தொகை சார்ந்து நடத்தப்பட்ட, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாடவும் பேசவும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர், திரு. கலியமூர்த்தி IPS (பணி நிறைவு) அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment