சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள
பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் 140-வது
பிறந்த நாள் விழாவை கடந்த சனி செப்.22, 2018 அன்று பெரியவர்கள், இளைஞர்கள்
மற்றும் குழந்தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃபோர்னியாவின்
கூப்பேர்டினோ நகரில் கொண்டாடினர். இந்தியாவின் மிகச்சிறந்த சமூக
சீர்திருத்தக்காரர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு,
சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்ற உயரிய கொள்கைகளின்
அடிப்படையில் பல்வேறு கருத்தரங்குகள், கேள்வி-பதில் அமர்வுகள்
நடைப்பெற்றது.
சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான
எழுத்தாளர் டாக்டர்.வா.கீதா இந்தியாவில் இருந்து வீடியோ பல்வழி அழைப்பின்
வழியே “பெரியார் – பொது வாழ்க்கையின் ஒரு முன்மாதிரி” என்ற தலைப்பில்
உரையாற்றினார். முதலில் பெரியாரின் அறம் சார்ந்த பகுத்தறிவும் பொது
புத்தியும் எப்படி சாதிய-மத வாதிகளின் அறிவிலிருந்து மேம்பட்டது
என்பதையும், பெரியார் எப்படி எப்போதும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் தன்
இரு கண்களாகக் கொண்டு சமூக பணியாற்றினார் என்பதையும் விளக்கினார்.
பெரியார் தனது கொள்கை உறுதிக்கு நேர்-எதிராக இருப்பவர்களுடனும் ஒரே
மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு சவால்கள் விட்டு, அவர்களின் சவால்களுக்கும்
அறிவார்ந்த பதில் அளித்தார். இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியர்
அவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசத் தயார் என்று தன் அறம் சார்ந்த
கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்திய உறுதியாளர். அவரது எழுத்துக்கள் தமிழ்
மற்றும் ஆங்கிலம் தாண்டி தற்போது மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தி
மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க நல்ல
வளர்ச்சி என்றும் டாக்டர்.வா.கீதா குறிப்பிட்டார். இந்த மொழிப் பெயர்ப்பு
முயற்சி, இந்தியாவில் சமீப காலங்களில் கட்டமைக்கப்படும் ஒற்றை கலாச்சார
இந்துத்துவ சிந்தனையை சவால் செய்யக் கூடிய கருவியாக இருக்கும் என்றார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment