இந்திய உச்சநீதி மன்றத்தின் ஒரு முக்கியத்
தீர்ப்பு செப்டம்பர் 6, 2018 வெளியானது. 158 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த
இந்தச் சட்டம் பிரிட்டிஷ் கால ஆட்சியின் மூலம் கொண்டு வரப்பட்டச் சட்டம்.
ஓரினச் சேர்க்கைக்கு இந்தியாவில் இனி சட்டப் பூர்வமான அங்கீகாரம் உண்டு
என்ற இந்த தீர்ப்பு, இந்தியா போன்ற மிக பிற்போக்குச் சிந்தனை கொண்ட
நாட்டில் வரலாற்றுத் தீர்ப்பாகும். இயற்கைக்கு மாறாக உறவு எனும் விதியின்
கீழ் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இன்று
இந்த தீர்ப்பின் மூலம் இனி ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின்
பெயரில் இணைந்து வாழலாம் .
“consensual sex between adults in a
private space, which is not harmful to women or children, cannot be
denied as it is a matter of individual choice. section 377 results in
discrimination and is violative of constitutional principles,”said the
SC.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக
சரத் 377 ஓரினச் சேர்க்கையை தடை செய்வதாக உச்ச நீதி மன்றம்
தெரிவித்துள்ளது. இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
நீதியரசர் R .F நரிமன், A M கான்வில்கர், D Yசந்திராசுட், இந்து மல்ஹோத்ரா
என்ற ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை
தந்துள்ளது பாராட்டத்தக்கது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment