இலக்கியங்கள் அறத்தையும் பொருளையும் ஒருங்கே வலியுறுத்துவன. வாழ்வில்
வளம்பெற வேண்டுமெனில் அஃது பொருளால் மட்டும் நிறைவு பெறாது. அப்பொருளுடன்
அறமும் இணைந்த பின்பே நிறைவுபெற்று நிலைநிற்பதென அறிவுறுத்துவன.
சான்றோர்கள் கூறிய அறநெறி வாழ்வை மேற்கொள்ளத் தலைவன் தலைவியை விடுத்து
வினைவயிற் போன்ற பிரிவு நிகழ்த்தினும் தலைவிக்கு ஆதார ஊற்றாகவும், வாழ்வின்
பிடிப்பாகவும், பல்லோர் அவளைப் போற்றும் தன்மையுடையவளாகவும் விளங்கச்
செய்பவன் தலைவனே ஆவான். சங்கப் பாடல்களில் தலைவன் கூற்றுக்களை விட, தலைவி
உள்ளிட்ட பெண்களின் கூற்றுக்களே மிகுதியாக இருப்பினும் அவர்களை இயங்கச்
செய்யும் இயங்கு சக்தியாக இருப்பவன் தலைவனே. இதனால்தான் அப்பெண்
மாந்தர்களின் கூற்றுக்கள் அனைத்தும் தலைவனை மையமிட்டதாகவே
அமைந்திருக்கின்றன. எனவே, சங்க மாந்தர்களை நகர்த்திச்செல்லும்
மையப்புள்ளியாகத் தலைவன் திகழ்கின்றான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களவு,
கற்பு வாழ்க்கையில் தலைவியை விடுத்துத் தலைவன் பிரிந்துறையும் போது
பிறமாந்தர்களின் கூற்றுக்களில் அவன் அன்பின்மையைப் பற்றியும், குணநலன்களைக்
குறித்தும் இடம்பெற்றிருப்பதை உணரமுடியும். அப்படிப்பட்ட ஆளுமைத் தன்மை
உடைய தலைவன் புணர்ந்து பிரிந்த காலத்திலும், கற்புக்காலத்தில் பிரிந்த
போதிலும், மீண்டு வந்து தலைவியோடு இணைந்த காலத்திலும் தலைவனுக்கு ஏற்பட்ட
உள்ள மாறுதல்களை உளவியல் கூறுகள் வழி இக்கட்டுரை ஆராய்கின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment