மனிதனின் உணவுப் பழக்கம் அவன் வாழும்
இடத்தின் தட்ப வெப்ப நிலை, அப்பகுதியில் விளையும் தானியங்கள், காய்கறிகள்,
வளரும் உயிரினங்கள் மற்றும் பல காரணிகளைக் கொண்டு அமைகிறது. மனிதனின்
முதல் தொழிலே வேட்டையாடுதலும் மீன் பிடித்தலும் தான். ஆகவே அவன்
இயற்கையில் புலால் உணவு உண்பவனே.
ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களால்
மூளை வெளுப்பு செய்யப்பட்டவர்களும் மரக்கறி உணவே மனிதனின் உடலுக்கும்
உள்ளத்திற்கும் நல்லது என்று பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
காவிகள் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் இப்பரப்புரைகள் அர்த்தமே இல்லாத
வகையில் சுழன்று சுழன்று வருகின்றன. எந்த ஒரு தர்க்க வழியிலும் இல்லாமல்.
கீறல் விழுந்த இசைத் தட்டு போலத் திரும்பத் திரும்பப் பரப்புரை செய்யும்
பார்ப்பனர்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை புலால் உணவை – அதுவும் மாட்டுக்
கறியை – மிகவும் விருப்பமாக உண்டவர்கள் தான்.
பார்ப்பனர்கள் புலால் உணவு உண்டு கொண்டு
இருந்ததற்கான சான்றுகள் மனு ஸ்மிருதியிலும், புராண இதிகாசங்களிலும் நிறைவே
உண்டு. அதிலும் மாட்டுக் கறி என்றால் அவாளுக்கு மிகவும் பிடிக்கும்.
வேள்வியின் போது கிடைக்கும் மாட்டுக் கறியைச் சாப்பிட வேண்டும்
என்பதற்காகவே பார்ப்பனர்கள் மன்னர்களையும், செல்வந்தர்களையும் வேள்வி
செய்யு வேண்டும் என்று அறிவுரை சொல்வர்கள். ஆசை காட்டுவார்கள்,
வற்புறுத்தவும் செய்வார்கள். இதனால் வேள்விகள் பெருகிய நிலையில் மாடுகளின்
எண்ணிக்கை குறைந்து, வேளாண்மைக்குப் போதுமான மாடுகள் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment