பா.ச.க ஆட்சியமைத்திருக்கும், இந்த கடந்த
நான்கு ஆண்டுகளாகவே நாம் அனைவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அனைத்து துறைகளிலும், தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மக்கள்நல
வளர்ச்சித் திட்டங்களுக்கு பதில், மக்களை பல வழிகளில் மிகவும்
வாட்டிவதைத்துக் கொண்டுதானிருக்கிறது. பொருளாதாரத்திலும்,
வேலைவாய்ப்புகளிலும், பெண்கள் பாதுகாப்பிலும், சிறுபான்மையினரின்
நலத்திலும், நாட்டின் வளர்ச்சி விகிதத்திலும், மதச்சார்பின்மை விசயத்திலும்
மிகவும் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பது தான்
நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், அரசை எதிர்த்துப்
போராடுபவர்களை, குரல் கொடுப்பவர்களை ஒடுக்கப்பார்க்கிறது. உயிருக்கான
அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கைது செய்கிறது. வீட்டுக் காவலில்
வைக்கிறது. ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்கிறது. ஒரு சனநாயக நாட்டில் வாழும்
மக்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை இல்லையென்றால், அது
சனநாயகத்திற்கு ஏற்படும் பெரும் ஆபத்து இல்லையா.! சில மாதங்களுக்கு முன்,
இதனை, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, நேரடியாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்களே.
இந்த சர்வாதிகாரப்போக்கின் உச்சக்கட்டமாக அவசரநிலை பிறப்பிக்கப்படுமோ என்ற
அச்சம் மக்களின் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment