கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல்
திரு. வ. உ. சிதம்பரனார் அவர்களின் 146வது பிறந்த நாள் விழா செப்டம்பர்
மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் முதல் மாநிலமாம்
டெலவரில் முதன்முறையாக இனிதே கொண்டாடப்பட்டது. இது போன்ற விழாக்கள் தமிழ்ப்
பெருந்தகைகளைப் பற்றிய செய்திகளை இளம் தலைமுறையினருக்கு கடத்துவதற்கான
நோக்கத்தில் நடத்தப்படுவனவாகும். இந்த நோக்கத்தில் முதன் முதலாக கடந்த
ஏப்ரல் மாதம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது. தற்போது வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
வ. உ.சி அவர்களின் பிறந்த நாள் விழா
தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பிறகு குழந்தைகளுக்கான வ. உ.சி
அவர்களின் வரலாறு குறித்த வினாடி வினா போட்டி, வ.உ.சி அவர்களின் மார்பளவு
உருவப்படத்தை வரையும் போட்டி மற்றும் பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டி
ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.
ந.க.இராஜ்குமார் வினாடிவினாப் போட்டியை சிறப்பாக வடிவமைத்து திறமையாக
நடத்தினார். இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாகக்
கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment