கடந்த சில ஆண்டுகளாகவே நாம் கவனித்து
வருகிறோம். நம் மாநில அரசு, மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசாக சிறிது கூட
இயங்கவில்லை என்பது தெளிவான ஒன்று. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மயம். அதோடு
மட்டுமல்லாமல், முழு அதிகாரத்தையும் மத்திய மோடி அரசிடம் இழந்து
நிற்கிறது. மத்திய அரசு செய்யும் அனைத்து காரியத்திற்கும்
தலையாட்டிக்கொண்டு, கைகட்டி சேவகம் புரிந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கு
ஆண்டுகளில், தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் நடக்கவில்லை என்பதுதான் மறுக்க
முடியாத உண்மை. மேலும் தமிழ்நாட்டை விரோத மனப்பான்மையுடன் தான்
பார்க்கிறது மத்திய பா.ச.க அரசு.
சாமானிய மக்கள் வாழ்வதற்கான அறிகுறிகள்
சிறிதும் தென்படவே இல்லை. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றன.
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு, குறு வணிகர்கள், என அவர்களின்
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, துன்பப்படுத்தப்படுகிறார்கள். இயற்கை
வளங்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. மீத்தேன், கெயில், நியூட்ரினோ,
கூடங்குளம் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனிம வளங்களை அழிப்பதில் குறியாய்
இருக்கும் மத்திய அரசிற்கு சிரம் தாழ்த்தி வணங்கி, சொந்த மாநில மக்களுக்கு
துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது ஆளும் அதிமுக அரசு. மேலும் ஆற்றுமணல்
முழுதும் சுரண்டி எடுக்கப்பட்டு, நீராதாரத்தையும் கெடுத்துள்ளனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment