Wednesday 14 November 2018

கோண்டு ஓவியம்


Siragu Gond Art1
கோண்டு ஓவியம் என்பது இந்தியப் பழங்குடியினரான கோண்டு மக்கள் (Gondi or Gond) வரையும் ஓர் ஓவிய முறை. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது மொழி தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கோண்டு பழங்குடியினர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் வாழ்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தின் அண்டை மாநிலங்களிலும் பரவியுள்ளார்கள். கோண்டு என்பது பச்சைமலை என்ற பொருள் தரும். இவர்கள் மூதாதையர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பவர்கள், இராவணனை தங்கள் முன்னோர் என்று கருதுபவர்கள். ஆதலால் இராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வுகள் இவர்களுக்கு ஏற்புடையதன்று.

இவர்கள் இயற்கையை மிகவும் போற்றுபவர் என்பதால் இவர்கள் ஓவியங்களின் கருத்துகள் இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். சுவர் ஓவியங்களாகச் செம்மைப்படுத்தப்பட்ட மண்சுவர்களில் பெரும்பான்மையாகவும், சில சமயங்களில் நன்கு மெழுகிய மண் தரைகளிலும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைவர். அடர்த்தியான தன்மை கொண்ட வண்ணங்களில், குறிப்பாக காவி, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் ஓவியங்களில் இடம் பெறும். படங்களில் காவி சிவப்பு மஞ்சள் பழுப்பு வண்ணங்களின் தாக்கம் அதிகமாகவும், நீலம், பச்சை தேவைக்கேற்பவும், கருப்பு வெள்ளை குறைவாகவும் இருக்கும். ஓவியத்திற்கான நிறத் தேர்வு இயற்கையில் காணப்படும் நிலையைக் காட்டும் வகையிலேயே பெரும்பான்மையாக அமையும். பழங்குடியின் ஓவியக்கலையாக இருந்ததை உலகஅரங்கில் வெளிக்கொணர்ந்தவர் ஜங்கர் சிங் ஷியாம் (Jangarh Singh Shyam, 1962-2001) என்பவர். இவரால் கோண்டு ஓவியங்கள் மண்சுவர்களில் இருந்து சட்டமிடப்பட்ட கேன்வாஸ் துணிகளுக்கு இடம்பெயர்ந்து, புதிய பாணியை ஏற்றுக்கொண்டு உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment