அன்று அந்த ஊரில் திடீரென ஆலங்கட்டி மழை
பெய்ய ஆரம்பித்தது. பொதுவாக மழைக்கு முன்பு லேசாக விழும் ஐஸ் கட்டிகள்
அன்று அதிகமாக விழ ஆரம்பித்தன. அப்போது சூரியன் பல்லிளித்துக்
கொண்டிருந்தான். பகல் வேளையில் சூரியக் கதிர்கள் பிரகாசமாக இருக்கும்
நேரத்தில் பெய்த அதிசயமான மழையை அவன் வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் பெயர் பாலசுப்பிரமணியன். அவனை எல்லோரும்
பாலு என்றுதான் அழைப்பார்கள். அவனுக்கும் அப்பெயர்தான் பிடித்திருந்தது.
விசித்திரமாகப் பெய்யும் அப்படிப்பட்ட மழையை அவன் அதற்கு முன்பு ஒரு முறை
பார்த்திருக்கிறான். அப்போது அவனுக்கு வயது ஐந்து. சிறுவனாக இருந்ததால்,
அப்போது பார்த்த காட்சிகள் அவன் நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தன.
அப்போது,“காட்டில் குள்ளநரிக்குக்
கல்யாணம் நடக்கும் அதான் இப்படி மழை பெய்கிறது” என்ற செய்தி அவ்வூரில்
இருந்த சிறுவர்கள் மத்தியில் பிரபலமாகப் பரவியிருந்தது.
“வானில் தேவர்களுக்குக் கல்யாணம்
நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கல்யாணத்தில் கலந்துகொண்ட தேவர்கள்
மணமக்களின் மேல் அர்ச்சனை தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தூவும்
மலர்கள்தான் இவ்வாறு வந்து விழுகின்றன” என்றும் சிலர் கூறினார்கள்.
அதையெல்லாம் உண்மை என்று நம்பினான் அவன். அவனுக்கு அப்போது அறியாத வயசு
அதனால். ஆனால் இப்போது அப்படி இல்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment