மக்கள் தங்களைப் பாதிக்கும்
பிரச்சினைகளைப் பற்றிப்பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப்
பேசவைப்பதன்மூலம், தங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும்
மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச்
சரியாக வழிநடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசைதிருப்பும் கலையில் மிகுந்த
திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்திய பிரதமர்
மோடியும், அவரது கூட்டாளிகளும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத்
திகழ்கிறார்கள்.
கருப்புப்பணத்தை ஒழிப்பதாகச்
சொல்லிக்கொண்டு, ரூ.500, ரூ1,000பணத்தாள்கள் செல்லாது என்று
அறிவித்தார்கள். ஆனால் கருப்புப்பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ்வங்கி
அறிவித்துவிட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
வரிவிதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக்கொண்டு, பொருள் மற்றும் சேவைவரியை
(ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள்
அழிந்துபோயின.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment