அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு வேறு யாரின் துணையோ
அல்லது வேறு நூல்களின் துணையோ தேவையில்லை. அவரே எழுதிய சத்திய சோதனை
போதும். சத்திய சோதனை ஒரு மகத்தான மனிதர் தானே எழுதிய தன் வரலாற்று நூல்
மட்டும் அல்ல. இந்தியாவின் வரலாற்றை, சத்தியத்தின் வரலாற்றை, இந்திய
மக்களின் எழுச்சியை, இந்தியாவின் ஆன்ம பலத்தை விளக்கும் மிகப்பெரிய ஆவணம்.
சத்திய உணர்ச்சி பொங்கித் ததும்பும் உன்னத காவியம். அந்தக் காவியத்தின்
ஒவ்வொரு எழுத்திலும் சத்தியம் நூறுக்கு நூறு விழுக்காடு சத்தியமாக
விளங்குகிறது.
சத்திய சோதனை நூல் இந்திய மக்கள் இல்லம் தோறும் இருக்கவேண்டிய புத்தகம். இந்திய மக்களின் மனங்கள் தோறும் இருக்க வேண்டிய புத்தகம்.
சத்திய சோதனை நூல் முழுவதும்
சொல்லப்பட்டிருப்பது சத்தியம் என்ற ஒன்று மட்டுமே. சத்தியம் ஒன்றே அதன் 623
பக்கங்களிலும் நிரம்பிக்கிடக்கிறது. சத்திய சோதனை நூலினை ஆரம்பம் முதல்
இறுதி வரை படிக்கலாம். அல்லது இறுதியில் இருந்துத் தொடங்கி ஆரம்பம் வரை
படிக்கலாம். ஒரு நாளை ஒரு பக்கம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம்
படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வரியேனும் படிக்கலாம். எப்படிப் படித்தாலும்
சத்தியம் என்ற அடிநாதத்தின் வெற்றி குறைவில்லாமல் சத்திய சோதனை நூலுக்குள்
வெளிப்பட்டு நிற்பதை உணரமுடியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment