நூலும் நூலாசிரியரும்:
இன்று பெரும்பாலோர் தங்கள்
குலப்பெருமையைப் பேசுவதையும், அனைவருமே தாங்கள் “ஆண்ட குலத்தின் வாரிசுகள்”
எனத் தயக்கமின்றிச் சொல்வதையும், அவர்கள் தங்கள் பெருமையை வீதியோர
சுவரொட்டி, மேடைப்பேச்சு முழக்கங்கள் முதற்கொண்டு இணையத்தின் வலைப்பூக்கள்,
முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் வரை விட்டு வைக்காமல் பரப்புரை
செய்வதையும் எதிர்கொள்வது நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வாகிவிட்டது. தங்கள்
சமூக நிலையை உயர்த்த உருவாக்கப்பட்ட நூல்கள் சிலவற்றை பேராசிரியர் நா.
வானமாமலை அவர்கள் ஆய்வு செய்து “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக்
கருத்துகள்” என்ற நூலில் வெளியிட்டுள்ளதைக் குறித்து நாமும் முன்பொரு
நூலறிமுகக் கட்டுரையில் பார்த்த நினைவிருக்கலாம். (தமிழகத்துச் சாதி
சமத்துவப் போராட்டங்கள் – http://siragu.com/தமிழகத்துச்-சாதி-சமத்துவ/).
அவ்வாறாக, நா. வானமாமலை அவர்கள் குறிப்பிடும் நூல்களின் வரிசையில் தோன்றிய
மற்றொரு நூலாக, திரு. தங்கம் விசுவநாதன் அவர்கள் எழுதி நந்தினி பதிப்பகம்
மூலம் வெளியிடப்பட்ட “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு” என்ற நூலையும்
நாம் கருதலாம். நந்தர் என்ற புனைபெயரில் தங்கம் விசுவநாதன் அவர்கள் மங்கல
சமூகத்தார் குறித்து ஆய்வு செய்து வெளியிட்ட நூல்கள் இரண்டு தொகுதிகளாக
வெளியாகியுள்ளன (எனக்குப் படிக்கக் கிடைத்த நூல், “ஆய்வுநூல்-2″ தொகுதி
மட்டுமே என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்).
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment