1930களில் தொடங்கிய புதுக்கவிதையின்
தோற்றம் மெல்ல மெல்ல படிநிலையான வளர்ச்சியைப் பெற்ற புதுக்கவிதை
ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைத் தொடர்ந்து
1950களில் இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் அளித்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு
மணிக்கொடி முன்வந்து ஏற்றுக் கொண்டிருந்தது.
மணிக்கொடி இதழுக்குப் பின்னர்
தொடங்கப்பட்ட தீபம், சங்கு, எழுத்து, கசடதபற, ழ போன்ற இதழ்கள் ஒவ்வொரு
காலகட்டத்திற்கும் தோன்றி புதுக்கவிதையை சீரிய நோக்கோடு வளர்த்தெடுக்கத்
தவறவில்லை. எனினும் 1960களில் அவ்வப்போது தேக்கம் அடைவது போன்று தென்பட்டு
மீண்டும் அந்நிலை ஏற்படாதவாறு அப்போதைய எழுத்து இதழ் தீவிரமான புதுக்கவிதை
எது என்பதில் விவாதம் செய்து அதன் விளைவாக ஏற்பட்ட கருத்துரைகள், அது
தொடர்பான விமர்சனங்கள் புதிய வளம் சேர்க்க எல்லா விதமான முயற்சிகளையும்
எடுத்தன. அதன் விளைவாய் சில சீர்கேடுகள் புதுக்கவிதையில் ஓரளவு
தவிர்க்கப்பட்டது. தடுக்கப்பட்டது என்று கூறலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment