இடஒதுக்கீடு என்பது ஒரு சமூகநீதி,
சமத்துவம் என்ற கருத்தியலை அடிப்டையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு.
காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு
எதிலும் உரிமையில்லாத, கேட்டாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரை
முன்னேற்றி மேலே கொண்டுவந்து சமநிலையை எட்டுவதற்காக எழுதப்பட்ட ஒரு
அரசியலமைப்புச் சட்டம். அதில் சமூகரீதியாக, கல்வி ரீதியாக என்று மட்டுமே
குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக என்ற சொல்லை
பயன்படுத்தவில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ச.க அரசு, திடுதிப்பென்று,
இரண்டே நாட்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய
உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒரு சட்டத்தை
நிறைவேற்றி, அதிலும் இந்த ஆண்டே அதாவது வரும் கல்வியாண்டு
அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே
எதிரானது. 1928 – ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது
என்று உச்சநீதிமன்றம் 1950-ல் தீர்ப்பளித்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு
ஏற்பட்ட நிலையினை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில், மாபெரும்
போராட்டங்கள், கிளர்ச்சிகள் எழுந்தன. அதன் காரணமாக, முதலாவது அரசியல்
சட்டத்திருத்தம் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த
அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட
அமைச்சர் டாக்டர். அம்பேத்கார் மற்றும் பல உறுப்பினர்களுடன் விவாதித்து,
அதற்கு முன்னர், அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான
340 -ல் எந்தெந்த வரையறை சொற்கள் போடப்பட்டதோ, அதே சொற்களை “Socially and
Educationally” “சமூக ரீதியாக, கல்விரீதியாக” என்பதை அப்படியே பயன்படுத்தி,
15(4) என்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக புதுப்பிரிவை,
இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெற செய்தனர். அப்போதும்
சிலர், Economically என்று பொருளாதார ரீதியாக சேர்க்க வலியுறுத்தினார்.
அப்போது, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.