ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்
மற்ற வகுப்பினருக்கும் கலப்பு ஏற்படும் போது, அதுவும் குறிப்பாகத்
தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆணுக்கும் ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும் திருமணம்
என்றால் அதற்குக் கடும் எதிர்ப்பு தோன்றுகிறது. அது மட்டும் அல்ல, சில /
பல சமயங்களில் அது ஆணவக் கொலைகளிலும் முடிகிறது. இப்படி இருக்கும்
நிலையில் இன்று நடக்கும் கலப்புத் திருமணங்கள் வளர்ச்சியா? வீக்கமா?.
வளர்ச்சி என்றால் அதை மேற்கொண்டு தொடரவும், வீக்கம் என்றால் அதை
வளர்ச்சியாக மாற்றவும் நாம் என்ன செய்ய வேண்டும்?
சாதி / வருணக் கலப்புத் திருமணங்கள் இன்று
நேற்று இருந்து அல்ல, அது தோன்றிய காலம் தொட்டே நடந்து கொண்டுதான்
இருக்கின்றன. மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த
காலத்தில், ஒரு பார்ப்பனன் நான்கு வருணத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம்
செய்து கொள்வது ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையாகவே இருந்தது. அது போல்
ஒரு சத்திரியன் பார்ப்பனர் அல்லாத மூன்று வருணப் பெண்களையும், ஒரு வைஷ்யன்
பார்ப்பனர், சத்திரியர் தவிர்த்த இரண்டு வருணப் பெண்களையும் திருமணம்
செய்து கொள்ளலாம். சூத்திரனோ சூத்திரப் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து
கொள்ள முடியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment