Wednesday 16 January 2019

பெண்ணிய பாதை


Siragu penniyam1
பெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.
பெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சமூக அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.
சங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)
என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.

“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்ககூடாது, ஊரத்தக் குரலில் பேசக் கூடாது, பொறுமையும் தியாகமுமே அவளது அணிகலன் என்று நாள்தோறும் அறிவுறுத்தி வளர்க்கப்படுகிறாள். அதிகாரமற்ற பொம்மைகளாகவே அலங்கரிக்கப்படுகிறாள். இவை அனைத்தும் சமூகத்தால் ஏற்படுத்தபட்ட கட்டமைப்புகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment