முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து!
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து!
பத்துப்பாட்டில் ஏழாவதாக திகழும் நூல்
நெடுநல்வாடை. இது தலைவன் போர்ப் பாசறையில் இருக்கும்போது தலைவி அவன்
வரவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நூலில் அகப்பொருள்
பற்றிய செய்திகள் நிறையாக இருப்பினும் இது புறப்பொருள் நூலாயிற்று.
ஏனெனில் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு
நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க்
கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்பொருள் நூலாயிற்று.
இந்த நூலை இயற்றியவர் நக்கீரனார் எனும்
நல்லிசைப் புலவர். இவரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர்.
இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்தயவர் என்று
அறியப்படுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment