அண்ணே “இவள் என்னுடைய பிரண்டு” என்று
அறிமுகப்படுத்தியபோது போது கதிரவனின் மனம் உறைந்து போனது. அதை
வெளிக்காட்டாமல் வலிய முயற்சித்து வரவைத்த சிரிப்புடன் சங்கீதா பேசுவதைக்
கேட்டுக்கொண்டிருந்தான்.
இல்லை! கேட்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தான்.
கல்லூரி காலத்தின்அழகிய காட்சிகள் அவன்
வெற்றுத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. அதைத் தவிர்க்கப்
போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் சங்கீதா அகஸ்டியாவைப் பற்றி அனைத்தையும்
கூறி முடித்திருந்தாள்.
“சரிண்ணே! அகஸ்டியாவைப் பத்திரமாய்ப்
பாத்துக்குங்க” என்று கூறிவிட்டு, அவளை உடன் அழைத்துக் கொண்டு அவளுக்கு
ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள்.
“வர்ரேன் சார்” என்று கையாட்டிச் சென்றாள் அகஸ்டியா, சங்கீதாவின் பின்னால் துள்ளி குதித்து வேகமாக!
அவளது பார்வை மறையும் வரை அப்படியே நின்ற கதிரவனுக்குத் தன்நெஞ்சில் மறைந்திருந்த பிரைசியின் நினைவுகள் பீரிட்டு வெளிப்பட்டன.
“அவளைக் கடைசியாக எப்போது பார்த்தேன்” என்ற விவரத்தைத் தேடிக்கொண்டிருந்தான் அவன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment