ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப்
பகுதியில் அமைந்துள்ளது காணா (Ghana) எனும் நாடாகும். அந்நாட்டின் தலைநகரான
அக்ராவில் (Accra) அந்நாட்டில் மிகப் பெரிய பல்கலைக்கழகமான காணா
பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இன்று இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் படித்துக்
கொண்டிருக்கிறார்கள். இங்கு 2016ஆம் ஆண்டில் இந்தியா – காணா இரு நாடுகளின்
நட்புறவுக்கு அடையாளமாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
காந்தியாரின் சிலையைத் திறந்து வைத்தார். அவ்வாறு காந்தியாரின் சிலையைத்
திறப்பதை அந்நாட்டின் அறிவுலக மக்கள் விரும்பவில்லை. ஏன்?
காந்தியார் தென் ஆப்பிரிக்காவில்
இருந்தபொழுது இந்தியர்கள் கருப்பின மக்களை விட மிகவும் உயர்ந்தவர்கள்
கூறியதைச் சுட்டிக்காட்டி அவர்கள் காந்தி சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். ஆனால் அந்நாட்டு அரசோ அவர்களின் எதிர்ப்பைப்
பொருட்படுத்தாமல் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்ற முனைப்பில்
காந்தி சிலையைத் திறக்க அனுமதித்து விட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment