உலகின் பல நாடுகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு
அனுமதி கொடுக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது
என்றால், என்றைக்கும் இந்தியாவில், மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை,
மனித வளத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை அதிலும் ஏழை, எளிய
மக்களின் பாதிப்புகள் என்றால் அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும்
கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றாகத்தான்
இருக்கிறது.!
மக்களின் உயிரை குடிக்கும் தொழிற்சாலைகள்
நாட்டிற்குத் தேவை தானா, இதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி
நிர்ணயிக்கப்படுகிறதா என்ற பல கேள்விகள் நம்முள் எழத்தான் செய்கிறது.
தூத்துக்குடியில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு உயிர்கொல்லி
நிறுவனம். இதை ஆரம்பிக்கும்போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இது
இயற்கைக்கு மாறானது, மண், நீர், காற்று, என அனைத்தையும் மாசுபடுத்தக்
கூடியது என்று கடுமையாக எதிர்த்தனர். இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு
கொண்டுவரப்படும் தாமிரத் தாதுக்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து
கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் ஸ்டெர்லைட் ஆலை தடை
செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை நடத்தும் வேதாந்த குழுமத்தின்
தலைவர் அணில் அகர்வால் வசிக்கும் இங்கிலாந்திலும் கூட ஸ்டெர்லைட் ஆலை தடைச்
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment