அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான
உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பகுதி
ஒன்றுக்கு புதிய பெயரைச் சூட்டியது. நூறுவயதான ‘காத்தரைன் ஜான்சன்’ என்ற
கறுப்பின விஞ்ஞானியை கௌரவிக்கும் பொருட்டு இந்த மாற்றம்
முன்னெடுக்கப்பட்டது.
காத்தரைன் கணிதத்தில் வல்லவர். அமெரிக்கா
முதன்முதல் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாதையைக்
கணக்கிடுவதில் பெரும்பங்காற்றியவர். அதன் பிறகு பல அப்பல்லோ ராக்கெட்
பயணங்களிலும் இவரின் கணித உதவி அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு உதவியது.
அவர்கள் வெற்றியுடன் புவிக்குத் திரும்ப பயணப்பாதையை வகுத்தவர் காத்தரைன்.
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவில் காலடி வைக்க வகுத்த
பயணத்தின் பாதையை கணக்கிடுவதிலும் இவர் உதவி செய்துள்ளார். முப்பத்தைந்து
ஆண்டுகள் இவர் நாசாவின் கணிதத்துறை விஞ்ஞானியாகப் பணி புரிந்து ஓய்வு
பெற்றவர். இவரது பணியைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கக்
குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘மெடல் ஆஃப் ஃப்ரீடம்” என்ற
விருதை அதிபர் ஒபாமா அளித்து இவரை சிறப்பித்தார்.
‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற பெயரில் இவரது
வாழ்க்கை வரலாறு ஒரு நூலாகவும், திரைப்படமாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்தது.
இவர் நாசாவில் பணிபுரியத் துவங்கிய காலம் 1950களில். அக்காலத்தில்
அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் கறுப்பர்களை ஒடுக்கி இருந்தது.
அறிவியல் கல்வி, உயர்கல்வி, அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற
பணிகளும் பெண்களுக்குக் கிடைக்காது. தவறி வேலையே கிடைத்தாலும் அவர்களின்
உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டதில்லை. அறிவியல் துறையில் உள்ள
பணிகளில் பெண்கள் வரவேற்கப்பட்டதுமில்லை. இந்த சூழ்நிலையில் நிறபேதம்,
பாலின பேதம் என இருவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் அமெரிக்காவின்
கறுப்பினப் பெண்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment