சாலையோரம் படுத்துறங்கிய மார்த்தா
இடுப்பின் பின் எலும்பில் ஊசிக்குத்துவது போன்ற வலியால் துடித்தெழுந்தாள்.
கிழக்கே உள்ள மணிக்கூண்டில் மணி 6-ஐ தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாத
குளிர், வரலாறு காணாத அளவு சிகாகோவை வாட்டிக்கொண்டிருந்தது. குளிரில்
நடுங்கியபடி கால்களை இறுக்கக் கட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்துப்
படுத்துக்கொண்டாள். மீண்டும் இடுப்பெலும்பை உருவி வெளி எடுப்பது போன்ற வலி.
தன் பையை அருகிழுத்து தேடிப்பார்த்தாள். அவள் தேடியது அகப்படவில்லை. என்ன
செய்வது? என்று யோசித்துக்கொண்டே சாலைகளில் வேகமாக சீறிப்பாயும்
மகிழுந்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மார்த்தாவிற்கு வயது 20. மார்த்தாவின்
அம்மா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து அரசு நடத்தும்
விடுதியில் இருக்கிறார். தன் 17 வயதில் அம்மா மனநல காப்பகத்தில், அப்பா
வேறு ஒரு துணையுடன் வாழ்க்கை என சென்றுவிட, வீட்டிற்கு வாடகை கட்ட
பணமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் மார்த்தா. இந்த மூன்று ஆண்டுகளில்
தெருவோரமே அவள் வீடானது. மகிழுந்துகள் சமிக்ஞைகிற்கு நிற்கும் போது,
ஒவ்வொரு மகிழுந்துவின் கதவருகில் நிற்பாள். யாரவது பணம் தந்தால் starbucks
சென்று காலை காபி குடிப்பாள். மதியம் ஏதாவது ஒரு சிறு உணவு விடுதியில்,
இருக்கும் பணத்தில் ஒரு சிறு ரொட்டித் துண்டை வாங்கிக்கொள்வாள். அதுவே
அவளுக்கு பல நேரங்களில் நாள் முழுவதற்குமான உணவு. ஞாயிற்றுக் கிழமைகளில்
மட்டும் community hall இல் இலவசமாக பலர் சேர்ந்து சமைத்து வழங்கும் உணவை
வாங்கிக்கொண்டு வருவாள். அதை பத்திரப்படுத்தி செவ்வாய்க்கிழமை வரை கூட
வைத்துக்கொள்வாள். சில நேரங்களில் எங்காவது வேலைக்குச் செல்வாள்; ஆனால்,
அங்கு யாரேனும் அவளிடம் வரம்பு மீறி நடந்தால் அவளுக்கு பிடிப்பதில்லை,
அதனால் வேலையும் நிலைப்பதில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment