மனித இனம் தோன்றியதில் இருந்து
முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றிய நாள் வரைக்கும் உற்பத்தி செய்யப்பட்ட
பண்டங்களை விட, முதலாளித்துவம் தோன்றிய ஒரு நூற்றாண்டில் உற்பத்தி
செய்யப்பட்ட பண்டங்களின் அளவு பல்லாயிரம் மடங்கு அதிகம் என்று ஒரு கருத்து
உண்டு.
முதலாளித்துவத்தின் தொடக்க காலத்தைவிட
இப்பொழுது உற்பத்தித்திறன் மிகப் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் இந்த
நவீன உற்பத்திப் பண்டங்கள் மனித வாழ்க்கை நலத்திற்குத்தானா என்பது ஆழந்த
பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது.
அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்
கழகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த, அண்மையில் (18.2.2019 அன்று) காலமான
வாலஸ் ஸ்மித் ப்ரோய்க்கர் (Wallace Smith Broecker) என்ற அறிவியல் அறிஞர்
நவீனகாலத்துப் பண்டங்கள் பெருமளவு கரியமில வாயுவை (carbon di oxide)
உமிழ்வதைக் கண்டு, இது புவி வெப்பத்தை உயர்த்தும் என்றும், அதனால் பருவநிலை
மாற்றங்கள் ஏற்படும் என்றும் 1975ஆம்ஆண்டிலேயே தெரிவித்தார். 1990ஆம்ஆண்டு
வரையிலும் யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment