காவிரிக்கு உரியவர் யார்? என்ற கேள்வி
இக்காலத்தில் மாநில அரசுகளுக்கிடையில் நிகழும் காவிரிநீர் பங்கீடு
பற்றியஉரிமைப் போராட்டம் குறித்து எழுந்த கேள்வியல்ல. மாறாக, காவிரி
யாருக்குரியவள் என்று தமிழிலக்கியப் பாடலும்,
வடமொழி கல்வெட்டுப்பாடல் ஒன்றும் குறிப்பிடும் செய்தியை மீள்பார்வை
செய்யும் முயற்சி.
திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி,செங்கோல் அது ஓச்சி,
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன்; வாழி, காவேரி! [புகார்க் காண்டம்: 7. கானல் வரி; 21-28]
உரை:
மாலையால் அலங்கரிக்கப்பட்ட முழுமதி போன்ற
அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழன், தனது செங்கோல் ஆட்சியின் கீழ்
கொணர்ந்த கங்கையுடன் கூடினாலும், காவேரி பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய்,
உன் பண்பு வாழ்க. அவ்வாறு வெறுப்பதை ஒழித்தது, கயல் கண்கள் கொண்டவளே, உனது
தலைவன் மீது நீ கொண்ட காதலால் விளைந்த கற்பு என அறிந்தேன், நீ வாழ்க.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment