பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில்
தோன்றியவை அல்ல, மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே
உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன்
பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத்
தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும்
மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன. அந்த
வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க
இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.
மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற
சிந்தனை சக்தியின் விளைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள்
கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல்
ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே
ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது
ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை
அறிவதுதான் பகுத்தறிவு. இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே
தெளிவுபடும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment