Tuesday 2 April 2019

காவிரிப்படுகையின் மொழி


Siragu tanjaore1
தஞ்சை என்றாலே எப்போதும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. அதற்குக் காரணங்களும்ஏராளம் இருக்கின்றன. சிலர் நினைப்பது போல் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராஜேந்திரசோழன், சுங்கம் தவிர்த்த சோழனான குலோத்துங்க சோழன் முதல் பல சோழர்கள் பல்லாண்டுகளாகதங்களது ஆட்சியை நடத்தினார்கள். தமிழர்களின் சிறந்த கட்டடக் கலையான பெரிய கோபுரம் கொண்டபிரகதீஸ்வரர் கோயிலும், புகழ்பெற்று விளங்கி வருகிற அரண்மனையும் அதனுள் மராட்டிய மன்னர் இராஜாசரபோஜியின் காலத்தில் அமைக்கப்பட்ட நூலகமும் ஓவியங்களும் கலைச் சிற்பங்களும், சிவகங்கைப் பூங்காவும் அதனுள் இருக்கும் அகழியும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவர்களைக்கண்டு புன்னகை செய்யும் மக்களும் அவர்களின் சிரிப்பும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதாலும் அத்தகைய புத்துணர்ச்சி வரவே செய்கிறது.


நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதையில் தடம்பதித்த ந.பி, கு.பரா-வின் தஞ்சையும், தமிழ் நாவல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட தி.ஜானகிராமனின் “மோகமுள்” நாவலில் சித்திர எழுத்துக்களால் வரைந்த தஞ்சையும் காவிரியும் அக்கதையில் வரும் பாபுவும் அவனுடைய யமுணாவின் மீதான காதலும் இசையும் தம்புராவும், பாபுவின் மீது காதல் கொள்ளும் தங்கத்தின் அன்பும் ஒருசேர இழைந்து கொண்டே இருக்கிறதோ என்ற பிம்பம். “மீனின் சிறகுகள்”, “கரமுண்டார் வீடு” போன்ற நூல்களையும் எழுதி வாழ்ந்த தஞ்சை பிரகாஷின் இயல்பான தஞ்சை. இவையெல்லாம் இலக்கியத்தில் ஒன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment