ஐஞ்சிறு காப்பியங்களின் கதை பொதுமரபு,
ஒழுங்கு சார்ந்தனவாக இல்லை. உதயண குமார காவியம் பெருங்கதை என்ற நூலைத்
தழுவிய கதை அமைப்பினை உடையது. இதனுள் இரு கதைத்தலைவர்கள் அமைகின்றனர். நாக
குமார காவியம் என்பதும் நாக பஞ்சமி என்ற வழிபாட்டு முறையை முன்
நிறுத்துவது. சமண சமயத்தாருக்குமட்டும் இது சிறப்பானது என்ற நிலையில்
இதுவும் சிறு காப்பியமாக்கப்பட்டுவிட்டது. சூளாமணியும் இரு கதைத் தலைவர்களை
உடையது. நீலகேசி என்பது குண்டலகேசியின் மறுப்பு நூல். யசோதர காவியம் நம்ப
முடியாத அளவில் உயிர் பிறப்பு, மறு பிறவி போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது.
மேலும் இக்காப்பியத்தின் கதை சற்று முரண்போக்கு உடையது. கணவனை
விட்டுவிட்டு, யானைப்பாகனுடன் நேசம் கொள்ளும் மனைவி பற்றிய கதை இதுவாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment