முன்னுரை
புறநானூறு பழந்தமிழர்களின் வாழ்நிலையைத்
தெரிவிக்கும் மிகச்சிறந்த நூல். உ.வே.சாமிநாதய்யர் புறநானூறு
ஓலைச்சுவடிகளைத் தொகுத்த பொழுது 267வது, 268வது பாடல்கள் முழுவதுமாகச்
செல்லரித்து இருப்பதைக் கண்டார். 244வது, 355வது பாடல்கள் பெரும்பகுதி
சிதைந்த நிலையிலும் மேலும் 32 பாடல்கள் சிறிது சிதைந்த நிலையிலும்
கிடைத்து, 398 பாடல்களும் அச்சில் ஏறி, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கையை
விவரிக்கும் அரிய கருவூலங்களாக நமக்குக் கிடைத்துள்ளன.
சமூக அமைப்பு
நடோடிச் சமுதாயமாக இருந்த மனித இனம்
நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்த பொழுது ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உலகின்
மற்ற பகுதிகளில் ஒரு விதமாகவும், ஆரியர்கள் குடியேறிய இந்தியாவில் வேறு
விதமாகவும் ஏற்பட்டன. ஆரியர்கள் திணித்த வர்ணாசிரம முறையின்
ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமே இந்திய வரலாறாக உள்ளது. ஆரியர்களின்
ஆதிக்கம் தமிழ்நாட்டிலும் பரவி இருந்தது. ஆரியர்களின் சூழ்ச்சித் திறனை
எதிர்த்து வெல்ல முடியாதவர்களில், அடிபணிந்தவர்கள் மருத நிலத்திலும்
நெய்தல் நிலத்திலும் நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்தனர். மற்றவர்கள்
குறிஞ்சி, முல்லை நிலங்களில் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment