பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்
தமிழுக்கு வந்த கலைவடிவம் நாவல். மேலைநாட்டு இலக்கியத் தாக்கத்தால் தமிழில்
அறிமுகமான நாவல், வடிவம் அளவு கருத்துச் செறிவு முதலான காரணங்களால் பெரும்
செல்வாக்கைப் பெற்ற கலைவவமாகத் திகழ்ந்தது. எழுத்தின் ஆற்றலும் கூர்மையும்
அணியாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல்கள் மக்களின் வாழ்க்கையை வாழ்வியல்
சூழல் மாற்றத்தை மறுமலர்ச்சியை வெளிப்படுத்தும் ஊடகமாகச் செயல்பட்டன
சிந்தனையாளர்களும் இயக்கவாதிகளும் நாவலைத் தம் கருத்துக்களை முன்னெடுத்துச்
செல்லும் கருவியாகக் கொண்டனர். இவ்வரிசையில் ‘‘ஜெயகாந்தன்’‘
குறிப்பிடத்தக்கவர்.
ஜெயகாந்தன் 1950 களில் படைப்புகளை எழுதத்
தொடங்கி அறுபதாண்டு காலமாகத் தனது எழுத்தின் வலிமையால் பல பரிசுகளைப்
பெற்றவர். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, சுயசரிதை, கவிதை எனப் பல
வடிவங்களில் படைப்புகளைத் தந்தவர். இவரது சிறுகதைகளும், நாவல்களும் இவரை
ஞானபீட பரிசுக்குரியவராக அடையாளம் காட்டிற்று.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment