குட்டிக் கரடி ராணி திடீரென்று ஏதோ ஞாபகம்
வந்தது போல் தனது அம்மாவிடம் “இசைனா என்னமா? எது இசை?”– என்று கேட்டது.
ராணி இப்போதுதான் மியூசிக் வகுப்பில் சேர்ந்திருந்தது. அதன் ஆசிரியை
புதிதாகச் சேர்ந்த மாணவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
குட்டீஸ்களுக்குப் பதில் தெரியவில்லை. “சரி! அடுத்த வகுப்புக்கு வரும்போது
நீங்க எல்லாரும் இதுக்குப் பதில் தெரிஞ்சிட்டு வந்து எனக்குச் சொல்லனும்!
சரியா?”–என்றார் அவர். அதனால்தான் ‘இசை என்றால் என்ன?’ என்று தெரிந்து
கொள்ள அம்மாவிடம் கேட்டது.
அம்மாகரடி இரவு உணவு தயாரிப்பதில்
மும்மரமாக இருந்தது. அது ராணியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. “ராணி!
நாளைக்கு நாம டிரெக்கிங் போறோம்!”–என்றது அது. டிரெக்கிங் என்றவுடன் ராணி
உற்சாகமாகி விட்டது. அப்படிப் போகும்போது ராணியின் நண்பர்களும் அதில்
சேர்ந்து கொள்வார்கள். அனைவரும் கூட்டமாக ஆடியும் பாடியும் பேசி
மகிழ்ந்தபடியும் மலையேறுவார்கள். மிகவும் ஜாலியாக இருக்கும். அதுவுமல்லாமல்
மலையில் சுவையான திணைகிழங்கு வகைகள் உண்ணக் கிடைக்கும். ராணி டிரெக்கிங்
குறித்த சிந்தனைகளில் மூழ்கிவிட்டது. அது அம்மாவிடம் தான் கேட்;ட கேள்வியை
சுத்தமாக மறந்து விட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment