குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு
எதிராகப் போராடிய மாணவர்கள் அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும்
நோக்கத்தில் கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் ஃபைஸின் “ஹம் தேக்கேங்கே” பாடலைப்
பாடினர். இப்பாடல் இந்து மத உணர்வுகளை அவமதிப்பதாகச் சர்ச்சை
கிளப்பப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதிய ஃபைஸ் இந்திய மாணவர்களும் அரசுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இப்பாடலைப் பாட விரும்புவார்கள்,
அப்படியும் ஒரு நிலை வரலாம் என நினைத்திருக்க மாட்டார். இந்து சமயம்
குறித்தே அப்பாடலை எழுதுகையில் எண்ணியிருக்கவும் மாட்டார் என்பதையும்
பாடலைப் படித்த பின்னர் உறுதியாகக் கூறலாம். அவர் அன்று எழுதிய சூழ்நிலையே
வேறு, இந்தியாவில் இன்றைய சூழ்நிலையும் வேறு.
1980களில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்
ஜியா உல் ஹக் நடத்திய கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடி புரட்சிப்
பாடல்கள் எழுதியவர் உருது மொழிக் கவிஞரான ‘ஃபைஸ் முஹமது ஃபைஸ்’ (Faiz
Ahmed Faiz). இடதுசாரி கொள்கைப் பாதையில் பயணித்த இவர் தவறான வழியில் சென்ற
அரசை எதிர்த்துப் புரட்சிப்பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றதுடன் அதனால்
சிறையும் பட்டார், கலகக்காரர் என்று அடையாளமும் காணப்பட்டார்.
இலக்கியத்துக்கான நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் என்ற சிறப்பும்
இவருக்குண்டு. கவிஞர் ஃபைஸ் முஹமது ஃபைஸ் அவர்களின் கவிதைகளின் ஆதரவாளர்
மறைந்த புகழ்பெற்ற பாகிஸ்தானியப் பாடகர், கஜல் அரசி எனப் பாராட்டப்படும்
‘இக்பால் பானோ’ (Iqbal Bano 1935 – 2009, இவர் இக்பால் பானு எனவும்
அறியப்படுவார்). இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்து பாகிஸ்தானியரைக் கரம்
பிடித்து அந்நாட்டில் குடியேறியவர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment