ஒரு நாட்டின் சமுதாயச் சூழல், அரசியல்
சூழல், பொருளாதாரச் சூழல், புலவர்களின் புலமைத்திறன், புலமை வேட்கை,
மக்களின் மனப்போக்கு, மக்களின் சுவை உணர்வு முதலிய பல்வேறு காரணிகளால்
காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வகையில்
தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே
பக்திஇலக்கிய வகை.
பண்பாடு
மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும்
இடையே உள்ள வேறுபாடு மனிதர்கள் பகுத்தறியும் திறனைப் பெற்றுள்ளமை ஆகும்.
இத்திறனால் குறியீடுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் இயல்வதுடன்
பண்பாட்டையும் உருவாக்கவும் பயன்படுத்தவும் இயல்வதுடன் பண்பாட்டையும்
உருவாக்குகின்றனர். மக்களின் வரலாற்றில் அவர்கள் படைத்துக்கொண்ட கருவிகள்,
சமூகப் பழக்கங்கள், வழக்கங்கள் நம்பிக்கைகள் ஒழுக்கங்கள், கொள்கைகள்
முதலியவற்றின் சாராம்சங்களைப் பண்பாடு எனப் பொதுவாக கூறலாம்.
சமுதாயத்திலிருந்து பெறப்படும்,
அடையாளங்கள், மதிப்புகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கடத்தக் கூடியதும்
பண்பாடு எனப்படும் என்று, தியோபார்கேப்லோ கூறுகின்றார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment