வளர்ந்து வரும் நகர்கள் எதிர் கொள்வது நகர
விரிவாக்கம், அதனால் மக்களில் சிலருக்குப் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.
அதுமட்டுமின்றி புதிய திட்டங்கள் தீட்டப்படுகையிலும் அப்பகுதியில் வாழும்
மக்கள் ஏதோ ஒரு வகையில் இழப்பை எதிர் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.
சென்னை பெருநகர் மெட்ரோ ரயில் திட்ட
விரிவாக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தப்பட உள்ள நிலம்
குறித்து அந்த இடங்களில் வாழும் பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம்
நடைபெற்றபொழுது நிகழ்ந்ததைச் செய்தித்தாள் வழங்கிய செய்தியின் மூலம்
அறியலாம். ‘‘கூட்டத்தில் நில அளவையர் பேசும்போது, ‘‘ஏற்கனவே மெட்ரோ ரயில்
அமைக்கும் வழித்தடம் முடிவு செய்யப்பட்டு விட்டது. அதில், ஏற்கனவே நோட்டீஸ்
வழங்கப்பட்டவர்கள், தங்களது நிலத்தைத் தானாகவே வழங்கிட வேண்டும்.
அதற்குரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படும். அப்படி இல்லையென்றால் அரசே
கையகப்படுத்தக்கூடிய நிலை ஏற்படும்’’ என்றார். இதற்குக் கூட்டத்தில்
பங்கேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘கருத்துக் கேட்புக்
கூட்டம் என வரவழைத்து விட்டு எங்களை மிரட்டும் தொனியில் பேசுவது நியாயமா?
நீங்களே ஒரு முடிவு எடுத்து விட்டு அதை எங்கள் மீது திணிக்கலாமா’’ எனக்
கூறி, கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம்
பாதியில் முடிவடைந்தது’’ என்பது நாளிதழ் கூறும் செய்தி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment