வில்லி சிம்மோன்ஸ் (Willie Simmons)
அலபாமாவைச் சேர்ந்த 62 வயது கறுப்பினத்தவர், $9 திருடியதற்காக 38 ஆண்டுகள்
சிறையில் இருக்கின்றார். அலபாமாவின் habitual Offender Law வின் படி
(அதற்கு முன் 3 முறை அவர் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளார்) 1982
ஆம் ஆண்டு அவருக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஷெல்புரனே (Shelburne) என்ற ஊடகவியலாளர் அவரோடு பேசிய போது சிம்மோன்ஸ்
தன்னைப் பற்றி சொன்ன விவரங்கள்:
சிம்மோன்ஸ் இராணுவத்தில் வேலை செய்து வந்த
போது போதை பொருளுக்கு அடிமையாகி ஒரு சண்டையில் ஒருவரின் 9$ திருடியதாக
குற்றம் சாட்டப்பட்டது. சிம்மோன்ஸ் குற்றத்தை மறுக்கவில்லை. அந்த சண்டையின்
போது தான் போதை மருந்தின் தாக்கத்தில் இருந்தததையும் குற்றத்தையும் அவர்
ஒப்புக் கொள்கின்றார். தன்னுடைய சகோதரி 2005 இல் மறைந்தபின் தன்னை பார்க்க
யாரும் வருவதில்லை என்றும் தான் ஒரு தனிமையான மனநிலையில் இருப்பதாகவும்
அவர் பதிவு செய்கிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment