சமயங்கள் மக்களை நல்வழிப்படுத்தி
அறவழியில் அவர்களைச் செலுத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும் ஒரு
காரணியாக விளங்குகின்றன. கோவில்கள் பண்பாட்டுக்களங்களாகவும்
அமைந்திருக்கின்றன. தானங்கள் செய்யும் இடமாகவும் கோயில்கள் விளங்குகின்றன.
அன்னதானம், ஆடைதானம், கோதானம், கண்தானம் போன்ற பல தானங்கள் செய்வதற்கான
இடமாகக் கோயில்கள் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
அன்னம் பாலித்தல் என்ற அன்னதானம் தமிழர்
பண்பாட்டின் முக்கியக் கூறாக விளங்குகின்றது. மணிமேகலை ‘உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே’ என்கின்றது. பெரியபுராணம் அடியார்க்கு உணவளித்தலை தலையாய
அறமாகக் கொள்கின்றது. இவ்வகையில் அன்னதானம் மிகச் சிறந்த தமிழர் கோட்பாடாக
விளங்குகின்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம்
புதுவயலுக்கு அருகில் உள்ள சாக்கோட்டையில் வீற்றிருக்கின்ற சிவதலத்தைப்
பற்றிப் பாடப்பெற்ற புராணம் வீரவனப்புராணம் ஆகும்.
No comments:
Post a Comment