Monday, 24 August 2015

தற்காலக் கல்விமுறை

tharkaalak kalvi murai2
கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம். இன்றைக்குக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகிப் போயிருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? கற்றவர்களின் அறியாமை முற்றிலும் விலகியிருக்கிறதா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். அவர்களின் மகன் நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்குக் கோள்கள் குறித்து ஒரு பாடம். பாடப்புத்தகத்தில் அதை ஒட்டி ஒரு படம். ஆங்காங்கே தொலைவில் நட்சத்திரங்கள் இருக்க , சில கிரகங்கள் மட்டும் இருப்பதைப் போன்ற படம். அவனுடைய வகுப்பு ஆசிரியை பெரிய பேப்பரில் பெரிதாக அதைப் போல வரைந்து வரும் படி வீட்டுப் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் பென்10, ஏலியன் போர்ஸ், மார்ஸ் உள்ளிட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘ஏலியன்’ குறித்துக் கற்பனையை வளர்த்துக் கொண்டிருந்த சிறுவன், தன் கற்பனைச் சிறகை விரித்து வரைந்திருக்கிறான். பெரிய நீலவண்ண தாளில் சில கிரகங்கள், செயற்கைக்கோள், பறக்கும் தட்டு, தலையில் ஆன்டனா உள்ள பெரிய கண்களுடைய வினோத ஏலியன், பூமி, செவ்வாய், சனிக்கிரகம், இரண்டு நிலவுள்ள புதுக்கிரகம் இப்படியாக இரவு முழுவதும் வரைந்து வண்ணம் தீட்டியிருக்கிறான். அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் பாராட்டி ஆசிரியரின் பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். மாலையில் வந்த பையன் முகத்தில் மிகுந்த அவமான உணர்வு. எதையும் சொல்லவில்லை. எதைக் கேட்டாலும் பதிலில்லை. கவலை தோய்ந்த முகத்துடன் உண்ணாமல் உறங்கி விட்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 19 August 2015

இருமலை குணப்படுத்த குறிப்புகள்

irumal1


  • சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும்.

  • மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட, சூட்டினால் உண்டாகும் இருமல் குணமாகும்.

  • விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 18 August 2015

குற்றாலத்தில் மூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி!

mooligai thottam fi
களை கட்டும் குற்றாலம் பகுதி, சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், ஆர்ப்பரிக்கும் அருவிகள், மந்திக் கூட்டங்களின் சலசலப்பு, சாரல் மழை.. என பரபரப்பாகக் காணப்பட்ட குற்றாலத்தில், சுகந்த மணம் பரப்பிய ஒரு மூலிகைத் தோட்டத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைக் கண்டோம். ‘யார் அவர்’ என்ற ஆர்வத்தோடு அருகே சென்றோம். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேகி. குற்றாலத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார். அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?

மேகி: இத்தாலி நாட்டிலுள்ள வரிஸி நகரம் தான் எனது சொந்த ஊர். கடந்த 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை. இயற்கை தான் என் குடும்பம்; என் உறவு..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 17 August 2015

மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே

Dr.Jerome
இன்றும்கூட நம்நாடு முழு படிப்பறிவை எட்டிய நாடு அல்ல. எல்லாத் துறைகளிலும் அறியாமை நமக்கு இருந்தாலும் கூட, மருத்துவ துறையில் பொதுமக்களுக்கு தற்குறித்தனம் அதிகமாகவே உள்ளது.
பிள்ளைகள் 30 வயது வரும் வரை கூட அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கின்றனர். மருத்துவத்தில் கூட ஏதாவது தீவிர நோய் நிலையில்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்களே தவிர மற்றபடி ஏதாவது உடல் பிரச்சனை வந்தால், “ பெரியப்பா சொன்னார்…., சித்தி சொன்னார்… “ என்று மருத்துவம் ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பெரியப்பாதான் பொது மருத்துவர், அவர் ஒரு சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைப்பார். அந்த சிறப்பு மருத்துவர் யார் தெரியுமா? ஏற்கனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒன்றுவிட்ட சித்திதான் அந்த சிறப்பு மருத்துவர். இப்படியாக நோய் முற்றும் வரை சிகிச்சை தொடரும். இவர்களைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து உள்ளது, அதை எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நோய் வேறு, நோயாளி வேறு.
நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அடிப்படையான ஒன்று. அதை விளக்குவதற்கே இந்தக் கட்டுரை.

ஒரு நோயை உதாரணமாக வைத்து நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 16 August 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-2

திருநெல்வேலிச் சீமை கிழக்கு பாளையம், மேற்கு பாளையம் என்று இரு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பாளையத்தினை கட்டபொம்மனின் பாட்டனார் ஆட்சி செய்து வந்தார், மேற்கு பாளையத்தினை மறவர் இனத்தினைச் சேர்ந்த புலித்தேவரின் முன்னோர்கள் ஆட்சி செய்து வந்தனர். வாரிசு உரிமைப் போட்டியில் ஆற்காடு நவாப்க்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாகவும், அவர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி அடைப்பதற்காகவும், திருநெல்வேலி மற்றும் தென்னகத்தில் வரி வசூல் செய்யும் உரிமையும், அதனைச் சார்ந்த ஓர் ஒப்பந்தமும் ஆங்கிலேயர்களிடம் ஆற்காடு நவாப் கொடுத்தார். தென்னகத்தில் புலித்தேவரிடம் முன்பே வரி வசூல் செய்ய முடியாமல் திணறிய நவாப், அவரின் மீது போர் தொடுத்தும் அதில் தோல்வி அடைந்தும் இருந்தார். எனவே இந்த சிக்கலான பகுதியில் நம்மால் வரி வசூல் செய்ய முடியாது, இதனை எப்படி சமாளிப்பது என்று இருந்தவர், இந்தப் பகுதிகளின் வரியை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார் ஆற்காடு நவாப்.
puli thevar2
இந்த ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டு, வியாபாரத் தொழிலுக்காக இங்கு வந்த அன்னியர்கள் நமது நாட்டில் வரி வசூல் செய்ய முதல் அடித்தளமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. நவாப்பிடம் உரிமை பெற்ற வெள்ளையர்கள், தென்னகத்தில் வரிவசூல் செய்யும் எண்ணத்துடன், மறத்தமிழர் புலித்தேவரின் வீரத்தினை அறியாமல் அவரிடமும் வரிவசூல் செய்ய அலெக்ஸாண்டர் கெரான் என்பவன் தலைமை ஏற்று புறப்பட்டான். இவன் வரி வசூல் செய்ய படையுடன் தென்னகம் வருகிறான் என்ற செய்தி கிடைத்ததும் தென்னகத்தில் இருந்த சில பாளையத்துக்காரர்கள், அவனை வரவேற்று வரி செலுத்தினர். வீரபாண்டி கட்டபொம்மனின் முன்னோர்களும் இவனுக்கு வரி கொடுத்தனர். மேற்கு பாளையத்துக்குச் சென்றான் புலித்தேவரிடம் வரி கேட்டான். “பிழைப்புக்கு வந்த அன்னியர்கள் நீங்கள், உங்களுக்கு நான் எப்படி வரி செலுத்துவேன், வரி என்ற பெயரில் ஒரு நெல்மணியைக்கூட நீங்கள் கொண்டு செல்ல முடியாது என்றார் புலித்தேவர். உடனே ஆங்கிலேயரின் படையை தலைமை ஏற்று வந்த கெரான் “வரி என்ற பெயருக்காகவாவது ஒரு சிறு தொகையை கப்பமாக உங்கள் பாளையம் கொடுத்தால் போதும்” என்று கூறினான். புலித்தேவரின் காலில் விழவில்லை, மற்றபடி அனைத்து வழிகளிலும் புலித்தேவரிடம் எவ்வளவு மன்றாடிக் கேட்டும், புலித்தேவர் வரி கொடுக்க மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday, 13 August 2015

தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்

subramanya sastri2
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்கள் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி, மங்களாம்பாள் இணையரின் மூத்த மகனாக, திருச்சி மாவட்டம் பாலக்கிருஷ்ணம் பட்டியில் ஜூலை 29, 1890 ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு இவரது 125 ஆம் ஆண்டு நிறைவு ஆண்டாகும்[1]. பன்மொழி அறிஞரான பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழிற்கும் வடமொழிக்கும் ஆற்றிய இலக்கியப்பணிகள் குறிப்பிடத்தக்கது.
தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தொல்காப்பிய மொழி பெயர்ப்பு பணியை 1919ல் தொடங்கி 1956ல் நிறைவு செய்துள்ளார் [2]. தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930 லும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937 லும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945 லும் வெளியிட்டார். தொல்காப்பியக் குறிப்பு என்று பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் எழுதிய நூல்கள் மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன.

தமிழ் அகராதியியலில் ஒரு திருப்புமுனையாக இருந்த “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் (1912ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை) இவருக்குப் பெரும் பங்கு உண்டு, அகராதியின் துணை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணியாற்றினார். வடமொழி நூலான பதஞ்சலியின் “மகாபாஷ்யா”வும் இவரால் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் வடமொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனந்தவர்த்தனர் என்பவரின் “தொன்யாலோகம்” என்னும் வடமொழி அணி இலக்கண நூலை “தொனிவிளக்கு” எனத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 12 August 2015

வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்காக வழங்கப்படும், ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற சுகிபிரேமலா

sugi premala2அப்போது நேரம் நள்ளிரவு 12.30. சுகி பிரேமலா அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
“அம்மா… நியாய விலைக் கடையின் அரிசியைக் கடத்திட்டு ஒரு வண்டி, மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு போய்க்கிட்டு இருக்கு. உடனே வாங்க”
அடுத்த 10 நிமிடங்களுக்குள் சுகி பிரேமலா குழுவினரின் வண்டி, அரிசி கடத்திக் கொண்டு செல்லும் வண்டியை விரட்டிச் செல்கிறது. சினிமாவை விஞ்சும் பரபரப்பான நிமிடங்கள் அவை. கேரளா எல்லையை நெருங்கும் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக முந்தி மடக்கிப் பிடித்து கடத்தல் அரிசியை மீட்கிறார்கள்.

சுகி பிரேமலா. கன்னியாகுமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பறக்கும் படை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இதுவரை கேரளாவுக்கு கடத்த முயன்ற 110 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 22,000 லிட்டர் மண்ணெண்ணெய், ஒன்றரை டன் அமோனியம் நைட்ரேட் (வெடிபொருள்) ஆகியவற்றை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து கடத்தலைத் தடுத்திருக்கிறார். இவற்றில் பல கடத்தல் வாகனங்களை விரட்டிச் சென்று பிடிபட்டவையும் அடங்கும். கடத்தலில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் இவரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.