Tuesday, 15 December 2015

கறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

kariveppilai3
வளர்ந்து வரும் நவ நாகரீகச் சூழலில் தமிழ்ச்சமூகத்தின் உணவு, உடை, மொழி, உறைவிடம், கலாச்சாரம், பண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் செல் அரித்துக் கொண்டும், மாற்றம் பெற்றும் வருகிறது. மாற்றங்கள் வளர்ச்சியின் அறிகுறிதான் என்றாலும் ஆரோக்கியத்தில் நமது பாரம்பரிய உணவை மறந்து உடலுக்கு தீமை செய்யக்கூடிய, நமது சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும் ஒத்துவராத உணவுகளை உட்கொண்டு வருவதால் நோய்களின் இருப்பிடமாக தமிழர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர்.
ஒரு வீட்டில் வாழுகிறவர்கள், இன்று மருத்துவச் செலவிற்கும் சேர்த்து கணக்கு போட்டு வாழும் சூழலுக்கு நடைமுறை வாழ்க்கை அவர்களை நகர்த்தியுள்ளது. வருமுன் காப்போம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று உடல் நலத்தில் தமிழரின் தாரகமந்திரம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
நம் ஊரில் இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளில் எத்தனை வகையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன என்பதை அறியாததன் விளைவே நோயாளிகளாய் வாழும் சூழலில் உள்ளோம். இக்கட்டுரையில் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலையைப் பற்றிக் காணப்போகிறோம்.

என்னது கறிவேப்பிலையா? அதில் என்ன சத்து உள்ளது, குழம்பில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தும் இந்தக் கறிவேப்பிலையில் அப்படி என்ன சத்து உள்ளது. அப்படியே குழம்பில், சட்டினியில் பயன்படுத்தினாலும் தட்டிற்கு வந்தால் தூக்கி தூர வைத்து விட்டே சாப்பிடுகிறோமே… அப்படி என்ன இதில் சத்து? என நீங்கள் கேட்கக்கூடும். இதோ அதற்கான பதில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 14 December 2015

நன்னூலில் நல்லாசிரியரின் பண்புகள்

nannool2
இயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ஆகும். சிலவகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்துச் சொல்லும் இந்நூல் இலக்கணச் சூத்திரங்களைக் கொண்டது. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நன்னூல் வழிநூல் மட்டுமல்ல, நல்ல வழிகாட்டி நூலும் ஆகும். இந்நூலின் வழி நல்லாசிரியரின் பண்புகளையும், தன்மைகளையும், நடத்தை நெறிகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
nannool3
கற்றுக் கொடுக்கிற ஆசிரியர் குலமும், கற்றுக் கொள்கிற மாணவர் குலமும் சேர்ந்ததுதான் குருகுலம். இந்த இரண்டு குலங்கள் இல்லையென்றால் மனித குலத்திற்கு மகத்துவம் இல்லை. குருகுலக் கட்டமைப்புகள் உடைந்து மாணவர் மைய கல்வி ஆதிக்கம் செலுத்துகிறது. “ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் நிர்ணயிக்கின்றன.” என்ற பொன்னெழுத்துகளுக்கு மதிப்பை வழங்கியவர்கள் ஆசிரியர்களே. “ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக பெற்றோர், இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்”. என்ற வைர வரிகள் மாதா, பிதா, குரு போன்றோரின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. குருமார்களை தெய்வமாக வணங்கிய காலம் போய், குருமார்கள் நண்பர்களாக மாறிவிட்ட புது யுகத்தில் ஆசிரியர்களின் சிறப்புகளை தொல்லிலக்கண நூல்களின் மூலமாக அலசி ஆராய்தல் சாலச் சிறந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 13 December 2015

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா?

sembarambaakkam3
சென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி.  அதன் உயரம் 24 அடி. இதன் உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
சென்னையிலும், அதைச்சுற்றியுள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் எந்த ஒரு நீர்நிலையையும் கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஏரிகளின் நீர்மட்டத்தை நிர்வகித்து இருந்தால் சென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை குறைத்தியிருக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சர்வதேச வானிலை மையம் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே எச்சரித்திருந்தது. சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசை எச்சரிக்கை செய்ததாக அதன் இயக்குனர் சிவன் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 11 December 2015

தங்கத் தமிழ் (கவிதை)

thangaththamil1
உயிர் மெய்யான தங்கத் தமிழ்
பயிர் செய்வது உங்கள் கையில்!
உயிர் என்பதாய் யான் மொழிதல்
உயர் காதல் தமிழில் அதனால்.
புதிய சொற்கள் கருத்துகள் தினம்
புதிதாய் பழகிட என்ன கனம்!
குளம் குட்டையாய் தேங்குவதா மனம்!

வளமுடை நதியான பிரவாகம் தனம்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19154

Thursday, 10 December 2015

மார்கழிக் கோலங்கள் (சிறுகதை)

markali kolangal1
அம்மாவின்குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போன்றிருந்தது.ரம்யாபோர்வைக்குள் சுருண்டுகொண்டாள். குளிருக்கு அப்படி முடங்கிக் கொள்வது இதமாக இருந்தது.
“எத்தனை தடவை எழுப்புறது? சொன்னா சட்டுனு எழுந்திரிக்க மாட்ட?” – அம்மாகுரலில் கடுமைகாட்ட வேறுவழியின்றி எழுந்து கொண்டாள்.
வெடவெடவென்று நடுங்கியபடி அம்மாவோடு வாசலுக்கு வந்தவளுக்கு அங்கேஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஊசிபோன்று உடலைக்குத்தும் பனியையும் பொருட்படுத்தாமல், அந்த அதிகாலை வேளையிலும் ஒவ்வொரு வீட்டுவாசலிலும் பெண்கள் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிலும், சிலபெண்கள் குளித்து ஈரத்துணியால் தலையைக் கொண்டையிட்டு பளிச்சென்று குங்குமம் துலங்கிய நெற்றியுடன் கோலம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரம்யா அவள் தெருவை இதுவரைப் பார்த்திராத கோணம் இது. தெரு விளக்கின் மினுமினுப்பில் வாரியிறைக்கப்பட்ட வண்ணங்களுடன் தெருவே அழகாகக் காட்சியளித்தது.
தெருவின் ஓட்டுமொத்த சுறுசுறுப்பு அவளையும் தொற்றிக்கொள்ள “இன்னிக்கு என்னமா விசேஷம்?” – என்று கேட்டாள்.
“இன்னிக்கு மார்கழி மாசப்பிறப்பு ரம்யா!” – என்றார் அம்மா.

“நான் கோலம் போடவாமா?” – ரம்யா கேட்டாள்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கடவுள்

kadavul1
மனித அறிவு புதிய பரிணாமங்களை எட்டிப்பிடிக்கும்தோறும் நாத்திகவாதம் அதன் எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறது. மனிதனின் லௌகீக வாழ்வின் பாதுகாப்பு உறுதியாகும்தோறும், கடவுளின் தேவையும் குறைந்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு முரண்இயக்கம் என்றோ அல்லது இயற்கையான நேர்இயக்கம் என்றோ அவரவர் பார்வைக்கேற்ற வியாக்கியானங்களை செய்து கொள்ளலாம்.
கடவுள் என்பது ஒரு இருப்பா அல்லது ஒன்றும் இல்லாததா? அது ஒரு கருத்தா அல்லது நம்பிக்கையா? கடவுளை உள்ளவாறே விளக்க முடியுமா? கடவுள் என்றாலே பதிலளிக்க முடியாத கேள்விகள்தான். இல்லையெனில் நம்பிக்கைகள். சிலரை கேள்விகளும் இன்னும் சிலரை நம்பிக்கைகளும் முன்னெடுத்துச் செல்கின்றன. அவ்வாறு முன்நகர்த்தாத கேள்விகளாலும் நம்பிக்கைகளாலும் மனிதர்களுக்கோ கடவுள்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.

மனிதப் பரிணாம வளர்ச்சியில், எண்ணங்கள் தோன்றிய காலத்திலேயே கடவுள் அல்லது அதற்கு இணையான கருத்து தோன்றியிருக்கக் கூடும். எண்ணங்களே தேடுதலுக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றன. அவையே அறிதல்களைத் தூண்டுகின்றன. அறியமுடியாதவற்றின் மேல் அச்சத்தையும் தோற்றுவிக்கின்றன. எனில் இன்று நாம் அறியும் கடவுள்களை தோற்றுவித்தது சந்தேகமே இல்லாமல் மனித எண்ணங்களும் சிந்தனைகளும்தான். அது மனித இனத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருந்திருக்கலாம் மனம் என்னும் புயலில் தாக்குண்டு சிதறாமல் இருப்பதற்கான பற்றுகோலாக இருந்திருக்கலாம்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 9 December 2015

சங்கப் பாடல்களை அறிவோம் : குறுந்தொகை-130

sangappaadalgal2
மணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை. அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை எப்படித் தேடுவது என்று தெரியாமல் அல்லல்படும் பெண்ணை ஆற்றுவிக்கும் தோழியின் எண்ண அலைகளே இப்பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.
நிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.

சாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.