மனித
அறிவு புதிய பரிணாமங்களை எட்டிப்பிடிக்கும்தோறும் நாத்திகவாதம் அதன்
எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறது. மனிதனின் லௌகீக வாழ்வின் பாதுகாப்பு
உறுதியாகும்தோறும், கடவுளின் தேவையும் குறைந்துக் கொண்டே செல்கிறது. இது
ஒரு முரண்இயக்கம் என்றோ அல்லது இயற்கையான நேர்இயக்கம் என்றோ அவரவர்
பார்வைக்கேற்ற வியாக்கியானங்களை செய்து கொள்ளலாம்.
கடவுள் என்பது ஒரு இருப்பா அல்லது ஒன்றும்
இல்லாததா? அது ஒரு கருத்தா அல்லது நம்பிக்கையா? கடவுளை உள்ளவாறே விளக்க
முடியுமா? கடவுள் என்றாலே பதிலளிக்க முடியாத கேள்விகள்தான். இல்லையெனில்
நம்பிக்கைகள். சிலரை கேள்விகளும் இன்னும் சிலரை நம்பிக்கைகளும்
முன்னெடுத்துச் செல்கின்றன. அவ்வாறு முன்நகர்த்தாத கேள்விகளாலும்
நம்பிக்கைகளாலும் மனிதர்களுக்கோ கடவுள்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.
மனிதப் பரிணாம வளர்ச்சியில், எண்ணங்கள்
தோன்றிய காலத்திலேயே கடவுள் அல்லது அதற்கு இணையான கருத்து தோன்றியிருக்கக்
கூடும். எண்ணங்களே தேடுதலுக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றன. அவையே
அறிதல்களைத் தூண்டுகின்றன. அறியமுடியாதவற்றின் மேல் அச்சத்தையும்
தோற்றுவிக்கின்றன. எனில் இன்று நாம் அறியும் கடவுள்களை தோற்றுவித்தது
சந்தேகமே இல்லாமல் மனித எண்ணங்களும் சிந்தனைகளும்தான். அது மனித இனத்தின்
தவிர்க்க முடியாத தேவையாக இருந்திருக்கலாம் மனம் என்னும் புயலில்
தாக்குண்டு சிதறாமல் இருப்பதற்கான பற்றுகோலாக இருந்திருக்கலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment