Sunday 13 December 2015

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா?

sembarambaakkam3
சென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி.  அதன் உயரம் 24 அடி. இதன் உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
சென்னையிலும், அதைச்சுற்றியுள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் எந்த ஒரு நீர்நிலையையும் கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஏரிகளின் நீர்மட்டத்தை நிர்வகித்து இருந்தால் சென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை குறைத்தியிருக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சர்வதேச வானிலை மையம் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே எச்சரித்திருந்தது. சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசை எச்சரிக்கை செய்ததாக அதன் இயக்குனர் சிவன் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment