அம்மாவின்குரல்
கிணற்றுக்குள் இருந்து கேட்பது போன்றிருந்தது.ரம்யாபோர்வைக்குள்
சுருண்டுகொண்டாள். குளிருக்கு அப்படி முடங்கிக் கொள்வது இதமாக இருந்தது.
“எத்தனை தடவை எழுப்புறது? சொன்னா சட்டுனு எழுந்திரிக்க மாட்ட?” – அம்மாகுரலில் கடுமைகாட்ட வேறுவழியின்றி எழுந்து கொண்டாள்.
வெடவெடவென்று நடுங்கியபடி அம்மாவோடு
வாசலுக்கு வந்தவளுக்கு அங்கேஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஊசிபோன்று
உடலைக்குத்தும் பனியையும் பொருட்படுத்தாமல், அந்த அதிகாலை வேளையிலும்
ஒவ்வொரு வீட்டுவாசலிலும் பெண்கள் அமர்ந்து கோலம் போட்டுக்
கொண்டிருந்தார்கள். அதிலும், சிலபெண்கள் குளித்து ஈரத்துணியால் தலையைக்
கொண்டையிட்டு பளிச்சென்று குங்குமம் துலங்கிய நெற்றியுடன் கோலம் இட்டுக்
கொண்டிருந்தார்கள்.
ரம்யா அவள் தெருவை இதுவரைப் பார்த்திராத
கோணம் இது. தெரு விளக்கின் மினுமினுப்பில் வாரியிறைக்கப்பட்ட வண்ணங்களுடன்
தெருவே அழகாகக் காட்சியளித்தது.
தெருவின் ஓட்டுமொத்த சுறுசுறுப்பு அவளையும் தொற்றிக்கொள்ள “இன்னிக்கு என்னமா விசேஷம்?” – என்று கேட்டாள்.
“இன்னிக்கு மார்கழி மாசப்பிறப்பு ரம்யா!” – என்றார் அம்மா.
“நான் கோலம் போடவாமா?” – ரம்யா கேட்டாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment