Sunday, 8 May 2016

நுழைவுத் தேர்வுகள்


Entrance-Examination4
மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் – GMAT, GATE, SAT போன்ற தேர்வுகளைப் போல. பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.
அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச் சொல்வதன் மூலம், பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள், இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்த்தமற்ற கூச்சல்களை எழுப்பி, பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.

Entrance-Examination7
நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது?. கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா?, அவ்வாறெனில் அவற்றின் தரத்தை உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 5 May 2016

உடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்


gain_weight3
  1. காய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
  2. நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும்.
  3. நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 4 May 2016

விலையான தாய்மடி(கவிதை)


vilayaana thaaimadi

ஏர்பிடித்தே   உழுதமண்ணாம்   ஆண்டு   தோறும்
எழில்பயிராய்   முப்போகம்   விளைந்த   மண்ணாம்
கார்முகில்கள்   ஒன்றுகூடி   மாதம்   மூன்றாய்
கருணையுடன்   பொழிந்தமழை   நீராய்த்   தேங்கி
ஆர்க்கின்ற   கடல்போல     ஏரி   கேணி
அனைத்திலுமே   வழிந்துவந்து   செழித்த   மண்ணாம்

ஊர்மகிழ   உறவெல்லாம்   மகிழ   வீட்டில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20517

Tuesday, 3 May 2016

சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும்


sanga kaala vizhakkal15
எல்லாவித மக்களுக்கும் வெவ்வேறு வகையான விழாக்கள் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முக்கியக் காரணம் அவ்விழாக்களில் சில அவர்களது சமயம் சார்ந்தும் காணப்படுவதுமாகும். அவைகள் கொண்டாடப்பட்ட காலங்கள், அதன் தன்மைகள் பற்றிய குறிப்புகள் அவர்களது இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது அவர்களது காலத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலமாகவோ மற்றும் பயணக் குறிப்புகள் மூலமாகவோ கிடைக்கின்றன. பெரும்பாலும் ஒரு ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அம்மக்களின் இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, கிடைக்கின்ற சான்றுகளே முதன்மையானதாகும்.
அதனடிப்படையில் தமிழகத்தில் சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்ககால நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களிலிருந்து ஆய்வு செய்தல் தக்கது என்ற முறையில் அவற்றினுள்ளே புதையுண்டு கிடக்கின்ற, இன்று நமது வாழ்விலிருந்து மறைந்து போயிருக்கின்ற சில விழாக்களின் தன்மைகள் பற்றியும் இங்கே காணலாம்.
கார்த்திகை திருவிழா:
sanga kaala vizhakkal2

தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற இவ்விழாவானது அடிப்படையில் சமய விழாவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விழாவினை இன்றும் நாம் கடைபிடித்தும் வருகிறோம். இவ்விழா பற்றிய குறிப்பை சங்ககால நூலான நற்றிணையில் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கதாகும். ஏனெனில் சங்ககால நூல்களில் முன்னதாக வைத்துப் போற்றக்கூடிய நூல் என்பதாலேயே இத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விழாவானது கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவாகும். கார்த்திகை விண்மீனை “அறுமீன்” என்றும் அழைத்துள்ளனர். கார்த்திகைத் திங்களை “அறஞ்செய்; திங்கள்” (நற்றி-202). என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக அகநானூற்றுப் பாடல் ஒன்றும் நமக்கு சான்று பகர்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp) பயன்படுத்தலாமா?


nalla kaalam1
“மனித மூளையை ஒடுக்கி சிந்தனைத் திறனை மழுங்கச் செய்பவை – முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp)“
நான் மேலே எழுதியிருக்கும் அந்த இரட்டை மேற்கோள் இட்ட  வரிகளைத் தொடர்ந்து  மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து உங்கள் மூளையில் பதிவேற்றிக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளில்  என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா, அது தான் அறிவியல் விஞ்ஞானம் தற்போது நமக்குக் கொடுத்துள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு. நமது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதிலும் இவை பெரும்பங்கு வகிக்கிறது என்ற உண்மையை எவரும் மறுக்கமுடியாது.

உலகத்தில் இந்த இரண்டு செயலியையும் முதலில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் நம் இந்தியாவும் இருக்கிறது. இரண்டாம் இடம் என்றவுடன் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாம், ஏனென்றால் இது பொருளாதார வளர்ச்சியோ, வளர்ச்சியில் தன்னிறைவோ  கிடையாது. சரி, நாம் விடயத்திற்கு வருவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 2 May 2016

இந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள் – ஒரு பார்வை


Divorce Act1

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் மணவிலக்குச் சட்டங்கள் தனியே உண்டு. அதேபோன்று சாதி மற்றும் மதத்தை மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம்(Special Marriage Act ), 1954 உண்டு.
இந்து என்று அழைக்கப்படும் மக்கள் அனைவரும் இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955 மூலம் மணவிலக்குப் பெற முடியும். சீக்கிய மதம்,  ஜெயினமதம்,  புத்த மதம் ஆகிய மதங்களும், இந்து மதத்தின் கிளை மதங்களாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற காரணத்தால் அவர்களுக்கும் இந்து திருமணச்சட்டம் பொருந்தும்.
இசுலாமியர்களைப் பொருத்தவரையில் இசுலாமிய திருமண ரத்துச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939)மூலம் மணவிலக்குப் பெறலாம். அதே போன்று கிறித்துவர்கள் இந்திய மணவிலக்குச் சட்டம் (Indian Divorce Act, 1869)மூலம் மணவிலக்குப் பெறலாம். பார்சி மதத்தினர் பார்சி திருமண மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Parsi Marriage and Divorce Act, 1936) மூலம் மணவிலக்குப் பெறலாம்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மக்கள் – ஆட்சி – அரசு


தமிழகத்தின் மக்களாட்சி மக்களின் ஆட்சியா?

உலகில் அரசு தோன்றிய நாட்களிலிருந்து இன்று வரை அமைந்த அரசு அமைப்புகளிலே, மக்களாட்சி முறை தான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது 1970 ஆம் ஆண்டுகளில், நாற்பது நாடுகளில் மட்டும் பின்பற்றப்பட்ட மக்களாட்சி, முறை இன்று  நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படாத நாடுகளில் வாழும் மக்களும் மக்களாட்சி முறைக்கு மாறிவிடவே விரும்புகின்றனர். இன்று பல நாடுகளில் அதற்கான போராட்டங்களும் நடந்து வருகின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து நம் நாட்டிலும் மக்களாட்சி முறையைத்தான் பின்பற்றி வருகிறோம்.
மக்களுக்கான அரசு, மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு, நடத்தப்படுவது தான் மக்களாட்சியின் சிறப்பு. ஆனால் நடைமுறையில் நமது மக்களாட்சி அப்படி செயல்படுவது இல்லை. மக்களாட்சியில் மக்களாகிய நாம் தான் முதன்மையானவர்கள். ஆனால் ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தவுடன் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு விரோதமாகவே அரசாங்கங்கள் செயல்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசு மக்களுக்காக செயல்படுவது அரிதாகிவிட்டது. தவறான அதிகார பிரயோகம்,  ஊழல், நிர்வாக திறமையின்மை போன்றவை தலை தூக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.